உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ! நான் தமிழர்களுக்கு எதிரானவனா ? அஜித் அதிரடி

0
1450
Actor Ajith

தமிழகத்தில் காவேரி மேலாண்மை அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் தமிழ் திரைப்பட சங்கம் சார்பில் நேற்றைய முன் தினம் மௌன போராட்டம் நடத்தப்பட்டது.போராட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட நிலையில் நடிகர் அஜித் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

ajitha with satyaraj

இது அஜித் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்ததோடு பலரும் அஜித்தை பற்றிய விமர்சங்களை வைத்து வருகின்றனர். பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கோ. விருது வழங்கும் விழாவிற்கோ அஜித் கலந்து கொள்வது இல்லை ஆனால் சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அஜித் இளைஞர்கள் பங்கு பெற்ற பிறகு அந்த வெற்றியின் பெயர் தனக்கு வந்து சேர்ந்துவிட கூடாது என்பதற்காக நான் அந்த போரத்தில் கலந்துகொள்ள தயங்கினேன் என்று பெருமிதமாக கூறினார்.

பொது விழாக்களில் கலந்து கொள்ளாதது சரி தான். ஆனால் மக்கள் பிரேச்சனை என்று வரும் போது கண்டிப்பாக ஒரு பெரும் நடிகர் என்ற பொறுப்பில் கலந்துகொண்டுதானே ஆகவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட போது பல்வேறு நடிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிதனர்.மேலும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டமும் நடத்தினர் அதில் பலரும் இலங்கைக்கு எதிரான தந்து எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்..மேலும் அப்போது அஜித் தமிழர்களுக்கு அதரவக பேசவில்லை என்று ஒரு சில வதந்திகளும் போய்கொண்டிருந்தது

actor ajith

அப்போது அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் அஜித் பேசிய போது நான் என்ன தமிழர்களுக்கு எதிரானவனா?, யாரோ ஒருவர் நான் சொன்னதாக சொல்வதை எப்படி நீங்கள் நம்பலாம். மேலும், எனது நண்பர் அர்ஜுனும் அப்படி சொன்னதாக சொல்கின்றனர், நாங்கள் ஒரு போதும் இப்படி ஒரு துரோகத்தை செய்யமாட்டோம் என்று மிகவும் உருக்கமாக பேசியிருந்தார்.