அஜித் கார், பைக் ஒட்டி பாத்திருப்பீங்க.! ஹெலிகாப்டர் ஒட்டி பாத்திருக்கீங்களா? வீடியோ இதோ.!

0
16842
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா கார் ரெஸர் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார் நடிகர் அஜித் குமார். அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும். நடிகர் அஜித்தை போல வேறு யாராலும் கார் ஓட்ட முடியாது என்று அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் பல பேர் கூறி நாம் கேட்டுளோம்.

-விளம்பரம்-
Image result for ajith mit

அதே அஜித் வீட்டின் கராஜில் பல வகையான பைக் மற்றும் கார் நின்றுகொண்டிருக்கும். ஆனால், பெரும்பாலும் அஜித் வெளியில் சென்றால் அவர் சிகப்பு நிற சிப்ட் கார் அல்லது வெள்ளை நிற இன்னோவா காரில் தான் பயணம் செய்வார். மேலும்,அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுக்கு நடிப்பை காட்டிலும் பைக் ரேஸ், கார் ரேஸில் தான் ஆர்வம் அதிகம் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

- Advertisement -

அவருடைய எல்லா படத்திலும் ஒரு சீனில் ஆவது பைக் ரேஸ் காட்சிகள் எடுக்கப்படும். அந்த வகையில் தற்போது வெளிவந்து சூப்பர் ஹிட்டான நேர்கொண்டபார்வை படத்திலும் ஒரு பைக் ரேஸ் ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதை தல அஜித் அவர்கள் தான் செய்தார் என்ற தகவலும் வெளிவந்தது. இப்படி அவர் நடிப்பில் காட்டும் அளவிற்கு அதிகமாக பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அதை விடக் கூடாது என்பதற்காகவே தன்னுடைய எல்லா படங்களிலும் அட்லீஸ்ட் ஒரு காட்சியிலாவது பைக் ரேஸ் வைத்து படம் நடித்து வருகிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

அதே போல அஜித், எம் ஐ டி கல்லூரியின் ஆளில்லா விமான குழூவின் தலைவராகவும் இருந்து வருகிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்.ஐ.டி.யில் படிக்கும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நடந்த மெடிக்கல் எக்ஸ்பிரஸ் 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியில் கலந்து கொண்டு ஆளில்லா விமானத்தை இயக்கி 2வது பரிசு பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், இதையடுத்து எம் ஐ டி பல்கலை கழகம் அஜித் அவர்களுக்கு கல்லூரியில் ஒரு சிறப்பு பொறுப்பை அளித்து கவுரவபடுத்தியது. இந்த நிலையில் அஜித் தற்போது மீண்டும் எம்.ஐ.டி.க்கு சென்று ஆளில்லா விமானத்தை இயக்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அஜித்தின் இந்த திறமையை கண்டு பலரும் அஜித்தை பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு அஜித் ஒரு பன்முக திறமைகள் கொண்ட நடிகராக விளங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement