அம்மா அப்பாவிற்கு வலிமை படத்தை காட்டியுள்ள அஜித், அவர்களின் ரியாக்ஷனால் படக்குழு எடுத்த முக்கிய முடிவு.

0
859
ajith
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து இருந்த வலிமை படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக இருப்பதால் ரசிகர்கள்
ஆவலுடன் எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கின்றனர். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அஜித் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் எல்லாம் வெளியாகி இருந்தது. மேலும், வலிமைப் படத்தின் அப்டேட்டுகள் சோஷியல் மீடியாவில் வருவதால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். இந்த ஆண்டு பொங்கல் அன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது.

- Advertisement -

வலிமை படத்தின் ரிலீஸ்:

நீண்ட காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் உற்சாகத்தில் உள்ளார். இந்த நிலையில் வலிமை படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே வலிமை படத்தைப் பற்றியும், அஜித் பற்றியும் இயக்குனர் வினோத் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அஜித் சார் என்னிடம் இந்த படத்தில் நடிப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று சொன்னார்.

இயக்குனர் வினோத் அளித்த பேட்டி:

படத்தில் நடித்த பிறகு நான் ஒரு பெருமைக்குரிய மகனாக, என் அம்மா, அப்பா மற்றும் என் குடும்பத்தாருக்கு இந்த படத்தை திரையிட்டு காட்ட போகிறேன். மேலும், அவர்களுக்கு படத்தை காண்பித்து அதற்கு அவர்களின் ரியாக்ஷனை அடிப்படையாக வைத்து தான் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். வலிமை மற்றொரு அதிரடி படம் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனைகளையும் பேசும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்.

-விளம்பரம்-

வலிமை படத்தின் கதை:

இதில் வரும் குடும்ப பிரச்சினைகள் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை பற்றியதல்ல. ஒரு குடும்பம் சமூகத்திற்குள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றியது. ஆகையால் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாக வலிமை உள்ளது. வலிமை படம் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் வெற்றியடையும் என்று கூறியிருக்கிறார். இப்படி வினோத் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்னும் சில தினங்களில் வலிமை படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏகே 61 படம் பற்றிய தகவல்:

வலிமை படத்தை தொடர்ந்து வினோத்குமார்- அஜித்- போனி கபூர் தலைமையில் ஏகே 61 படம் உருவாக உள்ளது. இயக்குனர் வினோத்குமார் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் முதல்கட்ட தற்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி விட்டார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இயக்குனரிடம் காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement