ஜெமினி படத்திற்காக அஜித் நடித்திய தர லோக்கல் போட்டோ ஷூட்.! மிஸ் பண்ணிட்டோம்.!

0
1353
Gemini

சீயான் விக்ரம் நடிப்பில் சரண் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு முன்பாக நடிகர் விக்ரம் தில் ,தூள் என்று இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்து இருந்தார். இருப்பினும் அந்த இரண்டு படங்களை காட்டிலும் இந்த படம் விக்ரமிற்கு ஒரு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்தது.

ஜெமினி படத்திற்காக எடுத்தது:

இந்த படத்தில் முதன்முறையாக நடிகர் விக்ரம் ஒரு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆனது தல அஜித் தான். இயக்குனர் சரன் ‘அமர்க்களம்’ படத்தைப் பார்த்துவிட்டு அதைவிட சிறப்பான ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று அஜித்திடம் இந்த கதையை கூறி உள்ளார். அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்ததோடு இதற்காக போட்டோ ஷூட் கொலைகூட நடத்தியுள்ளனர்.

ஆனால், சில பல காரணத்தால் அஜித்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, அப்போதைக்கு புகழின் உச்சியில் இருந்த விக்ரமை வைத்து இந்த படத்தை இயக்கினார் சரண். இருப்பினும் அஜித்தை வைத்து எப்படியாவது ஒரு கேங்க்ஸ்டர் கதையை எடுத்து விடவேண்டும் என்று சேரன் உறுதியாக இருந்தார். அப்படி உருவானதுதான் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகாசம் திரைப்படம்.

அட்டகாசம் படத்தின் போது எடுத்தது:

இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் ‘ஜெமினி’ படம் அளவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் ‘ஜெமினி’ படத்தின் போது அஜித் நடத்திய போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் அட்டகாசம் படத்திற்காக எடுத்தது என்று நீங்கள் கூறினாலும் ‘அட்டகாசம் ‘படத்தில் அஜித்தின் கெட்டபிற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை நீங்கள் புகைப்படத்தில் காணலாம்.