மைக்கேல் ஜாக்சனுடன் அஜித் எடுத்த புகைப்படம் ? வைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை.

0
9339
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படும் அஜித், மறைந்த பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதுகுறித்த உண்மை என்ன என்பதை பார்ப்போம். மைக்கல் ஜாக்சன் தி கிங் ஆப் பாப், மூன் வாக்கர் என்று ரசிகர்களால் பிரபலமாக அறியப்பட்டவர். பாடுவது என்பதை தாண்டி, தனக்கான ஒரு தனி நடன பாணியை உருவாக்கிக் கொண்டு உலகெங்கிலும் தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கியவர். உலக மக்களை தன்னுடைய பாப் இசை ஆளும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்க வைத்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன். அதோடு குக்கிராமத்தில் கூட ஒரு சிறுவன் நன்றாக நடனம் ஆடினால் ‘குட்டி மைக்கேல் ஜாக்ஸன் ’ என்று தான் அழைப்பார்கள்.

-விளம்பரம்-

அந்த அளவுக்கு அவரது புகழ் உலக முழுவதும் பரவியிருந்தது. இளம் வயதிலேயே இசையின் மீதும், நடனம் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தவர் ஜாக்சன். 11வது வயதிலேயே தனது சகோதரர்களுடன் இணைந்து ‘தி ஜாக்சன் 5’ என்ற இசை நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பாப் இசையை தொடங்கினார்.மேலும், பாடல் எழுதுவது, அதற்கு இசையமைப்பது, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே கொஞ்சம் நவரச நடிப்பு என அனைத்து திறமையையும் கலந்து ‘பாப்’ என்ற புதிய உலகை மைக்கல் ஜாக்சன் படைத்தார். மேலும், மக்களின் மத்தியில் 40 ஆண்டு காலமாக புகழ் பெற்றவராக வாழ்ந்து வந்தார் மைக்கல் ஜாக்சன்.

இதையும் பாருங்க : இன்னும் இத்தனை ஆண்டுகள் விஜய் டிவியில் தான் பிக் பாஸ் – அடுத்த சீசன் எப்போது தெரியுமா?

- Advertisement -

2009 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக மைக்கேல் ஜாக்சன் இறந்துவிட்டார் என்று அறிவித்தார்கள்.ஆனால், தற்போது வரை இவருடைய இறப்பிற்கு என்ன காரணம் என்று இன்னும் வரை அறிவிக்கப்படவில்லை. இவருடைய நடனத்திற்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் மைக்கேல் ஜாக்சனுடன், நடிகர் அஜித் எடுத்த புகைப்படம் என்று சமூக வலைதளத்தில் சில புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியும் இருக்கிறார். ஆனால், உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது மைக்கேல் ஜாக்சன் கிடையாது. அது மைக்கேல் ஜாக்சன் போன்றே இருக்கும் வேறு ஒரு நபர். ஆனால், இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் பலரும், அஜித் மைக்கேல் ஜாக்ஸனுடன் எடுத்த புகைப்படம் என்று வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement