இயக்குனர் சிவா மூலம் சூரிக்கு போன் செய்த அஜித்..!எதற்காக தெரியுமா ?..தல எப்பயும் தல தான்..!

0
781
Ajithphone
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி காமெடியன்கள் என்றால் அது யோகி பாபு மற்றும் சூரி தான். இதில் காமெடி நடிகரான சூரி நடிகர் அஜித்துடன் வேதாளம் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “சீமராஜா” படத்தில் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து அசத்தி இருந்தார். இதற்காக அவர் ஆறு மாதமாக உடற் பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாட்டையும் மேற்கொண்டார்.

-விளம்பரம்-

Soori

- Advertisement -

தற்போது நடிகர் சூரி தயரிப்பாளர் ஆர் கே சுரேஷ் நடித்து வரும் “பில்லா பாண்டி ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆர் கே சுரேஷ் ஒரு தீவிர அஜித் ரசிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜே கே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் தீபாவளியன்று “சர்கார் ” படத்திற்கு போட்டியாக வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.

இந்த இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூரி பேசுகையில், தல ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பார்த்து தெளிவாக இப்படத்தை செய்திருக்கிறார்கள். அஜித் சார் எந்த அளவிற்க்கு ஒரு நல்ல மனிதர் என்பதை பலரும் சொல்லி இருக்கார்கள். நான் அவருடன் வேதாளம் படத்தில் நடித்திருக்கிறேன். நான் சீமாராஜா படத்தில் சிக்ஸ் பேக் வைத்திருந்த புகைப்படம் வெளியான போது எனக்கு இயக்குனர் சிவா சாரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. நான் போனை எடுத்து சொல்லுங்க சார் என்றதும், ஒரு நிமிஷம் அஜித் சார் உங்ககிட்ட பேசணும்னு சொன்னார் என்றார்.

-விளம்பரம்-

நான் சொல்லுங்க சார் என்றவுடன்,வாழ்த்துகள் சூரி. இப்போ தான் உங்க சிக்ஸ் பேக் ஸ்டில் பார்த்தேன். எப்படி இப்படி வைச்சீங்க, எவ்வளவு நாள் மெனக்கிட்டீங்க சூப்பர். ஒரு கிராமத்திலிருந்து வந்து இவ்வளவு நாள் சினிமாவுக்கு மெனக்கிட்டு, இப்போ ஒரு சின்ன காட்சிக்காக இவ்வளவு மெனக்கிட்டு இருக்கீங்க. வாழ்த்துகள்” என்றார். எனக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது. அவ்வளவு பெரிய இடத்திலிருக்கும் மனிதர் போன் பண்ணி வாழ்த்துச் சொல்றாரே என்று நினைத்தேன் என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் சூரி. சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற “சீமராஜா” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கூட அஜித் குறித்து பேசியிருந்த சூரி, அஜித் சாரை எப்போது பார்த்தாலும் என்னிடம் அவர் கூறும் ஒரே அறிவுரை ஒழுங்காக வருமான வரி கட்டிவிடுங்கள் என்று தான் கூறுவார் என்று நடிகர் சூரி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement