கிரிக்கெட் உலகின் எதிர்காலத்தை அன்றே கனிந்துள்ள அஜித் – வைரலாகும் வீடியோ இதோ.

0
2106
- Advertisement -

கிரிக்கெட்டை குறித்து அஜித் கூறியிருந்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

துணிவு படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்று தந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் பின் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார்.

அஜித் பைக் பயணம்:

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டைட்டில் போஸ்ட்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. தற்போது அஜித் அவர்கள் பல நாடுகளுக்கு பைக் பயணம் சென்று இருக்கிறார். அதோடு இவர் தற்போது சொந்தமாக ஒரு பைக் ட்ரிப் நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

விடாமுயற்சி படம்:

தற்போது படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. மேலும்,இந்த படத்திற்காக அஜித் தன்னுடைய உடல் எடையை குறைத்து கொண்டு இருக்கிறார். இதனால் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் அஜித்தின் பழைய பேட்டி வீடியோவை தற்போது நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். அதாவது, பேட்டியில் அஜித்திடம் கிரிக்கெட் குறித்து கேட்டு இருக்கிறார்கள்.

அஜித் பேசிய வீடியோ:

அதற்கு அவர், இனி டி20 கிரிக்கெட் விளையாட்டு தான் பிரபலமாக இருக்கும்,. காரணம், மக்கள் அதிகபட்சம் மூணு மணி நேரம் செலவிட தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார். அஜித் சொன்னது போல் தற்போது T20 கிரிக்கெட் தான் பிரபலமாக இருக்கிறது. மேலும், அஜித் பேசியிருந்த வீடியோவை ‘அன்றே கணித்த அஜித்’ என்று டேக் செய்து சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement