பா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள்.! முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.!

0
1006
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே இல்லை. இந்நிலையில் அஜித்தின் 100 கும் மேற்பட்ட ரசிகர்கள் பா ஜ கவில்இணைந்தனர்.

-விளம்பரம்-

நேற்று (ஜனவரி 20) பல்வேறு கட்சியில் இருந்து பாஜகவில் சேரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழிசை செளந்திரராஜன் கலந்து கொண்டார். குறிப்பாக பாஜகவில் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்களை அவர் புகழ்ந்து பேசினார்.

- Advertisement -

திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர்.அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.இனி மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்என்றும், அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்றும் 

இதையடுத்து அஜித்தும் பி ஜே பிக்கு ஆதரவு தெரிவித்து விட்டார் என்ற மீம்களும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் அஜித் சார்பாக இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தான் எந்த கட்சியையும் சார்ந்தவர் இல்லை என்றும் தனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம். எனக்கு அரசியலில் எந்த ஆராவமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement