24 வருசமா ரேஸிங்ல இருக்கேன், எனக்கு அங்கீகாரம் கிடைக்கல – Bjp இணைந்தது குறித்து அஜித்தின் தோழி அலிஷா.

0
792
alisha
- Advertisement -

பாஜக கட்சியில் பெண் கார், பைக் ரேசர் அலிசா அப்துல்லா இணைந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மிக பிரபலமான கார்,பைக் ரேசர் அலிஷா அப்துல்லா. ஒரு இந்திய பைக் ரேஸ் விளையாட்டு வீரர். இவரே இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரும் ஆவார். இவர் சிறு வயதில் இருந்தே தானுந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய எட்டு வயதில் இருந்தே பயிற்சி பெற்று வருகிறார். பின் இவர் சாதனையும் படைத்து இருக்கிறார். இவர் 2014 இன்று ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் இரும்பு குதிரை என்ற படத்தின் மூலம் நடிகையாக அதோடு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இவர் நடிகர் அஜித்தின் தோழியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கார், பைக் ரேசரும், சினிமா நடிகையுமான அலிசா அப்துல்லா அவர்கள் அண்ணாமலையின் முன்பாக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை குப்புசாமி. இவர் அரசியல்வாதி தாண்டி காவல்துறை அதிகாரியும் ஆவார். இவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி இருந்தார்.

- Advertisement -

பாஜக கட்சி குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் பல மாவட்டங்கள், மாநிலங்களில் காவல் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். பின் விருப்ப ஓய்வு பெற்று இவர் அரசியலில் குதித்து இருக்கிறார். தற்போது இவர் தமிழக பாஜக தலைவராக இருக்கிறார். மேலும், தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்கு பல்வேறு உத்திகளை செயல்படுத்தி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் சினிமா நட்சத்திர நடிகர், நடிகைகள், விளையாட்டு துறை வீரர்கள், சமூக வலைத்தள பிரபலங்கள் என பல்வேறு துறைகளில் பிரபலமாக இருப்பவர்களை கட்சியில் இணைத்தும் வருகின்றனர்.

பாஜக கட்சியில் இணைந்த பைக் ரேசர்:

அந்த வகையில் தமிழகத்தில் சினிமாவை சேர்ந்த ராதாரவி, கௌதமி, காயத்ரி ரகுராம், எஸ் வி சேகர், ஆர் கே சுரேஷ், பொன்னம்பலம், மதுவந்தி, நமிதா என பல பிரபலங்கள் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்து கொண்டிருக்கின்றார்கள். இதில் சில பேர் கட்சியில் தீவிரமாக செயல்பட்டும் வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் இன்று பிரபல கார் மற்றும் பைக் பந்தய வீராங்கனை அலிசா அப்துல்லா சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் வி பி துரைசாமி மற்றும் பாஜக பிரமுகர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

-விளம்பரம்-

அலிசா அப்துல்லா டீவ்ட்:

இவருக்கு அண்ணாமலை பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மேலும், இது குறித்து அலிசா அப்துல்லா ட்வீட்டரில் கூறியிருப்பது, தமிழ்நாடு பாஜக குடும்பத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு அண்ணாமலையும், அமர் பிரசாத் ரேட்டையும் அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்ததை செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

அலிஷா அப்துல்லா பேட்டி :

24 வருடங்களாக நான் பைக் ரேசிங்கில் ஈடுபட்டு வருகிறேன் ஆனால் எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. மற்றவர்கள் செல்வது போல எனக்கு பாஜகவில் சீட்டு கொடுப்பதாக சொல்லி கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை நானாகத்தான் சேர்ந்து கொண்டேன் என்று கூறுகிறார். மேலும், மாட்டு இறைச்சி அரசியில் குறித்து கேட்கப்பட்ட போது , நான் அதை அவ்வளவாக சாப்பிட மாட்டேன். சிக்கன் சாப்பிட்டால் கூட எனக்கு வாந்தி வரும். என்னை கேட்டால் மொத்த சென்னை, இந்தியா அனைத்தும் சைவமாக மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement