‘ரொம்ப பந்தா காட்ட விரும்பல’ மேடையில் நடனமாடிய அஜித். வைரலாகும் அறிய வீடியோ

0
10423
ajith
- Advertisement -

சினிமா திரையுலகின் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். மேலும், “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்ற டயலாக் ஏற்ப மாதிரி வாழ்ந்து வருபவர் தான் தல அஜித். எப்பவுமே அஜித் அவர்கள் படம் புரமோஷன், இசை வெளியீட்டு விழா,அவார்ட் நிகழ்ச்சி என எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது இல்லை. அதுமட்டும் இல்லாமல் நடிகர் அஜித் ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று இருப்பவர்.

-விளம்பரம்-
https://twitter.com/Maalik_Bhai/status/1174691332729839616

தல அஜித் அவர்கள் கடைசியாக மேடை நிகழ்ச்சி என கலந்து கொண்டது முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி உடன் தான். அந்த மேடைக்கு பிறகு அஜித் அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும், பங்ஷன்களிலும் கலந்து கொள்ளவே இல்லை. அது மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட அஜித் சந்தித்து எந்த ஒரு பேட்டியும் கொடுப்பதில்லை. மேலும், நடிகர் அஜித் வாழ்க்கையின் முக்கியமான லட்சியங்களுள் இதுவும் ஒன்றாக வைத்து வாழ்ந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விழா ஒன்றில் அஜித் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த விழாவில் கேப்டன் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தார் அஜித்.

- Advertisement -

மேலும், அந்த விழாவில் பேசிக்கொள்ள அஜித் வழக்கமாக நான் விழாக்களுக்கு வருவதில்லை. ஆனால், நீங்கள் அனைவரும் நினைக்கலாம் எதற்காக நான் வந்திருக்கிறேன் என்று அது மிகவும் சிம்பிள், டான்சர், டெக்னீசியன் போன்றவர்களுக்கு என்னுடைய மரியாதையை செலுத்தவே நான் இங்கே வந்தேன் நாங்கள்.ஏதாவது ஒரு படப்பிடிப்பிற்கு சென்றாலும் அதற்கு பைட்டர்ஸ் மற்றும் டான்ஸர் தான் எங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். எனவே, நான் இங்கே வந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

https://twitter.com/ThangamV19/status/1288512692706107392

அதுமட்டுமல்லாமல் அஜீத் பேசி முடித்ததும் லாரன்ஸ் மற்றும் ராஜசுந்தரம் இருவரும் வந்து அஜித்தை நடனமாட சொல்கிறார்கள். ஆரம்பத்தில் சற்று தயங்கி, வேண்டாம் என்று கூறும் அஜித் அதன் பின்னர் அவர் நடித்த வில்லன் படத்தில் இடம்பெற்ற ‘அடிச்சா நெத்தியடியா அடிப்பேன்’ என்ற பாடலுக்கு ஒரு சில மூவ்மென்ட் மற்றும் போடுகிறார். அதன் பின்னர் நடனத்தை நிறுத்திவிட்டு வேண்டாம் போதும் ரொம்ப பந்தா காட்ட விரும்பல என்று கூறுகிறார் அஜித். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement