கலைஞரின் காலை தொட்டு எம்.ஜி. ஆர் விருதை வாங்கிய அஜித் – வைரலாகும் அரிய வீடியோ.

0
1349
ajith

சினிமா திரையுலகின் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். மேலும், “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்ற டயலாக் ஏற்ப மாதிரி வாழ்ந்து வருபவர் தான் தல அஜித். எப்பவுமே அஜித் அவர்கள் படம் புரமோஷன், இசை வெளியீட்டு விழா,அவார்ட் நிகழ்ச்சி என எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது இல்லை. அதுமட்டும் இல்லாமல் நடிகர் அஜித் ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று இருப்பவர்.

தல அஜித் அவர்கள் கடைசியாக மேடை நிகழ்ச்சி என கலந்து கொண்டது முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி உடன் தான். அந்த மேடைக்கு பிறகு அஜித் அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும், பங்ஷன்களிலும் கலந்து கொள்ளவே இல்லை. அது மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட அஜித் சந்தித்து எந்த ஒரு பேட்டியும் கொடுப்பதில்லை.

- Advertisement -

மேலும், நடிகர் அஜித் வாழ்க்கையின் முக்கியமான லட்சியங்களுள் இதுவும் ஒன்றாக வைத்து வாழ்ந்து வருகிறார். இருப்பினும் அஜித் பல ஆண்டுகளுக்கு முன்னர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் சில வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட நடிகர் லாரன்ஸ் அஜித்துடன் இணைந்து நடனமாடிய வீடியோ ஒன்று வைரலானது. இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித் கலைஞர் கையால் விருது வாங்கிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அதே விழாவில் விருது பெற்ற விஜய்

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு மாநில விருது வழங்கும் விழா ஒன்றில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கையால் நடிகர் அஜித், எம்ஜிஆர் விருதை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவில் மேடையில் ஏறும் போது நடிகர் அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமலஹாசன் போன்றவர்களின் காலைத் தொட்டு வணங்கி விட்டு, பின்னர் கலைஞரின் காலைத் தொட்டு வணங்கி அந்த விருதை பெறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

-விளம்பரம்-
Advertisement