தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது அஜித் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அளவுக்கு உயர்ந்த நடிகராக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை கடந்திருக்கிறார்.
தன்னுடைய கடும் உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் தான் இவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் இவர் சினிமாவில் நிறையவே சிரமப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம் இவர் பணம் நெருக்கடியிலும் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் பெப்சி விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு அஜித்திற்கு வந்தது. இந்த விளம்பரத்தில் நடிக்க இவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறியிருந்தார்கள். அந்த நேரத்தில் இந்தத் தொகை ரொம்பவே பெரியது.
ரசிகர்களுக்காக அஜித் செய்தது:
அதுமட்டுமில்லாமல் அஜித் சூழலுக்கு அந்த பணம் ரொம்ப தேவையும் பட்டது. இருந்தாலுமே, அஜித் அந்த வாய்ப்பை நிராகரித்தார். காரணம், பெப்சி விளம்பரத்தில் நடித்தால் தன்னுடைய ரசிகர்கள் அந்த பெப்சி குளிர்பானத்தை வாங்கி குடிப்பார்கள். இதனால் இது ஒரு தவறான செயலாக மாறிவிடும் என்பதால் தான் அஜித் அந்த வாய்ப்பை நிராகரித்தார். அதே ஒரு டீ விளம்பரத்தில் அஜித் நடித்து இருந்தார். அதற்கு காரணம், அந்த டீயை அஜித் பயன் படுத்தி இருந்தார்.
அஜித் குறித்த தகவல்:
அதனால் தான் அந்த விளம்பரத்தில் நடித்து இருந்தார் என்று பிரபலம் ஒருவர் பேட்டியில் கூறி இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார்.
அஜித் திரைப்பயணம்:
இந்தப் படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் என பலரும் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இதை அடுத்து அஜித் அவர்கள் ‘ குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது.
Good Bad Ugly படம்:
ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா, பகிரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் அவர் அஜித் உடைய தீவிர ரசிகர். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.