கஷ்டத்திலும் கோடி ரூபாய் சம்பளத்தை ரசிகர்களுக்காக அஜித் நிராகரித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே அஜித் குறித்து ஏதாவது ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர் ஒருவர், தன்னுடைய தலையில் அஜித்தோட பெயர் எழுதி வைத்ததை பார்த்து அவரைக் கன்னத்தில் அறைந்து இப்படி செய்யக்கூடாது மொட்டை அடித்து வா என்று அறிவுரை சொல்லி இருந்ததாக பிரபல நடிகை ஒருவர் கூறியிருந்தார்.
அஜித் குறித்த தகவல்:
இந்த நிலையில் ரசிகர்களுக்காக அஜித் செய்திருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. அதாவது, தற்போது அஜித் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிரபலமான நடிகராக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை கடந்திருக்கிறார். தன்னுடைய கடும் உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் தான் இவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் இவர் சினிமாவில் நிறையவே சிரமப்பட்டிருக்கிறார்.

ரசிகர்களுக்காக அஜித் செய்தது:
அப்போதெல்லாம் இவர் பணம் நெருக்கடியிலும் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் பெப்சி விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு அஜித்திற்கு வந்தது. இந்த விளம்பரத்தில் நடிக்க இவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறியிருந்தார்கள். அந்த நேரத்தில் இந்தத் தொகை ரொம்பவே பெரியது. அதுமட்டுமில்லாமல் அஜித் சூழலுக்கு அந்த பணம் ரொம்ப தேவையும் பட்டது. இருந்தாலுமே அஜித் அந்த வாய்ப்பை நிராகரித்தார். காரணம், பெப்சி விளம்பரத்தில் நடித்தால் தன்னுடைய ரசிகர்கள் அந்த பெப்சி குளிர்பானத்தை வாங்கி குடிப்பார்கள்.

அஜித் நடித்த படம்:
இதனால் இது ஒரு தவறான செயலாக மாறிவிடும் என்பதால் தான் அஜித் அந்த வாய்ப்பை நிராகரித்து இருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

அஜித் திரைப்பயணம்:
இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் என பலரும் நடித்திருக்கின்றனர். ஆக்ஷனும் எமோஷனும் கலந்த இக்கதையின் பெரும் பகுதி அஜர்பைஜானில் நடந்தது. சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இதை அடுத்து அஜித் அவர்கள் ‘ குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.






