‘டைம் வேஸ்ட் பண்ணாதீங்க’ பயில்வானின் எடக்கு மடக்கான கேள்விக்கு அசராமல் பதில் அளித்த அஜித் – அறிய வீடியோ இதோ.

0
506
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார்.மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

- Advertisement -

அஜித்தை கேள்வி கேட்ட பயில்வான் :

இப்படி ஒரு நிலையில் இவர் அஜித்திடமும் எடக்கு முடக்காக பேசி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் அஜித் பொது நிகழ்சகளில் பங்கேற்றே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற விழா அமைக்கப்பட்டு அதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர்.

அஜித்தின் இறுதி பொது நிகழ்ச்சி :

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அஜித், இது போன்ற அரசியல் விழாக்களில் எங்களை கட்டாயப்படுத்தி மிரட்டி வரவழைக்கின்றனர். எங்களுக்கு அரசியல் வேண்டாம். ஐயா, எங்களை நடிக்க விடுங்க அரசியலையும், சினமாவையும் ஒண்ணாக்க பாக்கிறாங்க. இதற்கு ஒரு நல்ல முடிவை எடுங்க ஐயா என்று மேடையில் தைரியமாக பேசி கலைஞரிடம் கோரிக்கை வைத்தார். அவரின் பேச்சை கேட்டு அரங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார்.

-விளம்பரம்-
Ajith

பில்லா படத்துக்கு முன் அஜித் :

மேலும், அஜித்தின் இந்த ஆதங்கமான பேச்சிக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. மேலும், நடிகர் அஜித் கலைஞர் வீட்டிற்கு சென்றிருந்த போது அஜித்தை தட்டி கொடுத்து அவரது தைரியத்தையும் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் டிவி பேட்டிகளை கூட அஜித் கொடுப்பது இல்லை. இப்படி ஒரு நிலையில் பில்லா படத்திற்கு முன்னர் நடந்த பிரஸ் மீட் ஒன்றில் அஜித் பேசி இருந்தார்.

அஜித் அளித்த பதில் :

அப்போது பயில்வான் ரங்கநாதன் ‘முன்ன மாதிரி உங்க ரசிகர்களுடனான தொடர்பு குறைந்துவிட்டதே அத பத்தி என்ன சொல்றீங்க ‘ என்று எடக்கு முடக்காக கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த அஜித் ‘நான் ஒரு தனிமையை விரும்பும் நபர். ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது நேரத்தை வீனாக்காதீர்கள். வயசு இருக்க அப்போவே அத யூஸ் பண்ணிக்கோங்க என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement