தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
இவர்களுடன் இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா டரியங், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட ஆண்ட்ரியா நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் தல அஜித்தின் பெயர் பாரத் சுப்பிரமணி. ஏனென்றால் பாரதியை போல பெண்களுக்காக போராடும் ஒரு புரட்சி நாயகனாக அஜித் இந்த படத்தில் நடித்துள்ளதால் தான் சுப்பிரமணிய பாரதி என்ற பெயரை அஜித்திற்கு வைத்தார்கள்.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை :
அதோடு இந்த படத்தில் தல அஜித் அவர்கள் வழக்கறினராக நடித்து இருந்தார். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஒரு சிறப்பான கருத்து சொல்லும் படமாக இந்த படம் கொண்டாடப்பட்டது. மேலும், இந்த படம் 2016 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து இருந்தார்.
அதுமட்டும் இல்லாமல் இந்த பிங்க் படம் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. மறைந்த நடிகை ஸ்ரீ தேவி கணவர் போனி கபூர் தான் இந்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் பெண்களிடமும் நல்ல ஆதரவைப் பெற்றிருந்தது.
தன் மகள் குறித்து அஜித் :
இந்நிலையில் அஜித் இந்த படத்தை தேர்வு செய்து நடித்ததற்கான காரணத்தை இயக்குனர் வினோத்திடம் கூறியிருக்கிறார். என் மகள் இந்த சமூகத்தில் தான் வாழ போகிறாள். இந்த சமூகத்தில் வாழும் ஒரு ஆண் ஒரு பெண்ணை எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். என்னுடைய படங்களில் பெரும்பாலும் வலிமையான பெண் கதாபாத்திரங்கள் இருந்தது இல்லை.
வலிமையான பெண் கதாபாத்திரங்கள் :
ஒரு சமூகமாக நாம் உண்மையைப் பேசுவதற்கு பயப்படுகிறோம். இந்த படம் அனைத்து பெண்களுக்கும் உதவும் வகையில் இருக்கும் என்றும் கூறியிருந்தார். இப்படி அஜித் கூறியிருந்ததை இயக்குனர் வினோத் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். தற்போது அந்த கருத்து சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.