அந்த வீடியோவை Pause பண்ணி விமர்சித்தாங்க, அதில் இருந்து தான் நான் எப்போதும் புடவை அணிந்தேன் – சாய் பல்லவி சொன்ன அந்த ஒரு டான்ஸ் video

0
855
saipallavi
- Advertisement -

தான் ஏன் புடவை உடுத்துகிறேன் என்பதற்காக காரணத்தை கூறியுள்ளார் சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் நானி நடிப்பில் இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி இருந்த படம். இப்படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை சாய் பல்லவி நிஜத்தில் ஒரு மருத்துவம் பயின்ற மாணவி என்பது பலருக்கும் தெரியும். அதே போல சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே சாய் பல்லவி குடும்பபாங்கான ரோலில் தான் நடித்து வருகிறார். அதே போல பல பொது நிகழ்ச்சிகளில் புடவை அணிந்தே செல்கிறார். இதற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் தனக்கு 18 வயது இருக்கும் போது கல்லூரியில் டான்ஸ் ஆடி இருந்தேன்.

- Advertisement -

இதையும் பாருங்க : அந்த வயதில் இருந்தே ரன்பீரை பிடிக்கும், தன்னை விட 10 வயது பெரிய ரன்பீரை திருமணம் செய்தது குறித்து மனம் திறந்த ஆல்யா.

18 வயதில் ஆடிய டான்ஸ் :

அப்போது நான் அந்த டான்ஸுக்கு ஏற்றார் போல கொஞ்சம் ஓப்பன் வைத்த உடையில் ஆடி இருந்தேன். ஆனால், நான் பிரேமம் படத்தில் நடித்து முடித்த போது பலரும் அந்த வீடியோவில் என் ஆடை விலகியதை பாஸ் செய்து சுட்டி காட்டி இருந்தனர். அது எனக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. அன்றில் இருந்தே நான் புடவையை கட்ட ஆரம்பித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால், என் பிள்ளைகளுக்கு எந்த உடையையும் அணியும் சுதந்திரத்தை கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

சாய் பல்லவியும் சமூக அக்கறையும் :

சாய் பல்லவி பல முறை தன் பேச்சு மற்றும் செயலால் பாராட்டை பெற்று இருக்கிறார். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை சாய் பல்லவியை அழகு சாதன நிறுவனம் ஒன்று அணுகி தங்களது விளம்பரத்தில் நடிக்க கேட்டுள்ளனர். அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக அதற்கு 2 கோடி சம்பளமும் பேசியுள்ளனர். ஆனால், அந்த விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துள்ளார். என் தங்கைக்கு அவளை விட நான் வெள்ளையாக இருக்கிறேன் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது.

வெள்ளையாக வேண்டும் என்பதற்காக அவர் காய் மற்றும் பழங்களை சாப்பிட்டால். அப்போது தான் நான் உணர்தேன் வெள்ளை ஆக வேண்டும் என்பதற்காக அவள் தனக்கு பிடிக்காததை கூட செய்தால். அப்படி இருக்க நானே கிரீம் தடவினால் வெள்ளை ஆகலாம் என்று மக்களிடம் பொய் சொல்லி ஒரு விளம்பரத்தில் நடிக்க முடியுமா. அப்படி வரும் பணத்தில் நான் என்ன காண போகிறான். அந்த பணத்தை வைத்து நான் அதே சாப்பாட்டை தான் சாப்பிட போகிறேன்.

சமீபத்தில் எழுந்த சர்ச்சை :

நம்மை சுற்றியுள்ளவர்களை நாமே ஏமாற்ற கூடாது என்று கூறியிருந்தார் சாய் பல்லவி. ஆனால், அந்த விளம்பரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட சாய் பல்லவி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் வரும் இன படுகொலை விஷயத்தை பற்றி பேசி இருந்தது பெரும் சர்ச்சையாக அவர் மீது பல விமர்சனங்களும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement