அப்போ விக்ரம், PS எல்லாம் என்ன மொக்க படமா ? அஜித்தின் கருத்தால் கடுப்பான நெட்டிசன்கள்.

0
743
ajith
- Advertisement -

அஜித்தின் பதிவால் கடுப்பாகி நெட்டிசன்கள் விமர்சித்து வரும் கமெண்ட் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. இதனாலே இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

துணிவு படம்:

மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து இருக்கிறாராம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை. இந்த கதை உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையாம். பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்திற்கான பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டும் தான் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

துணிவு படம் குறித்த சர்ச்சை:

அது மட்டும் இல்லாமல் கூடிய விரைவில் இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் எல்லாம் முடிவடைந்து விடும் என்றும் கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் அஜித்தை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, துணிவு படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. ஆனால், இதுவரை துணிவு படத்திற்கான எந்த ஒரு பிரமோசனமும் செய்யவில்லை. அது மட்டும் இல்லாமல் வலிமை படத்தின் போதுமே எந்த ஒரு பிரமோஷனும் படக்குழு செய்யவில்லை.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இது குறித்து அஜித் அவர்கள், நல்ல ஒரு படத்திற்கு எந்த பிரமோஷன் தேவை இல்லை என்று சொன்னதாக அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒன்று டீவ்ட் போட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை அடுத்து ரசிகர்கள் பலரும் கடுப்பாகி அப்ப விக்ரம், பொன்னியின் செல்வன் எல்லாம் குப்ப படமா? பேசணும் என்பதற்காக எதையும் சொல்லாதீர்கள். பாடல் வெளியீட்டு விழா, பிரமோஷன்பண்ணா நல்ல படங்கள் இல்லையா? என்றெல்லாம் விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement