ரசிகரை ஒருமையில் பேசிய மேனேஜர்..!போன் போட்டு மேனேஜரை விளாசிய அஜித்..!

0
483
Ajith

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து வந்த ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்புகள் எப்போதோ நிறைவடைந்த நிலையில் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்தின் அப்டேட் விரைவில் வரும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ‘விஸ்வாசம்’ படத்தின் அப்டேட் பற்றி தெரிந்துகொள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்துரா என்பவருக்கு செல் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால், அந்த ரசிகரை திட்டி தீர்த்துள்ளார் சுரேஷ் சந்துரா.

அந்த ஆடியோ பதிவில்,நீ படத்துக்கு ஏதாவது ஏரியா வாங்கிருக்கியா இதுக்கு மேல எவனாவது போன் பண்ணுனீங்க மரியாதை கெட்டுடும், எதுவா இருந்தாலும் ட்விட்டர்ல பார்த்து தெரிஞ்சிக்கோங்கடா உங்களை மாதிரி நாங்க என்ன வேலை இல்லாம இருக்கோமா என்று கடுமையாக பேசியுள்ளார் அஜித்தின் மேலாளர்.

அந்த ஆடியோ பதிவு மிகவும் வைரலாகி வர, அந்த ஆடியோவை கேட்ட அஜித் தனது மேலாளருக்கு போன் செய்து, சுரேஷ் நமக்கு தொழில்ல பொறுமைதான அவசியம். ஒண்ணு போன்ல பொறுமையா பதில் சொல்லுங்க. இல்லைன்னா ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு ரெஸ்ட் எடுங்க என்று கடுமையாக பேசியுள்ளார் தல.