அஜித்துடன் செல்பி எடுத்த போது ஏதோ கேட்ட ரசிகர் – அஜித் ரியாக்ஷன் (நல்ல வேல போன புடுங்கள)

0
3452
ajth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். தல என்று சொன்னாலே போதும் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் வெளிவந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து தற்போது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்ட நிலையை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் அஜித் அவர்கள் எப்போதுமே படபிடிப்பு இல்லாத நேரங்களில் தனக்கு பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்துவார். இது அனைவருக்கும் தெரிந்ததே. துப்பாக்கி சுடுதல், பைக் பயணம் போன்ற பல விஷயங்களில் ஈடுபாட்டுடன் செய்வார்.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் கூட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்ற அஜித் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஸ்யாவில் பைக் பயணம் செய்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. அப்போது அவருடன் நிறைய ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது ரசிகர் ஒருவர் அஜித்துடன் எடுத்த செல்பி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அஜித்திடம் ஏதோ அந்த ரசிகர் கேட்க அதற்கு எந்த பதிலையும் சொல்லாமல் அஜித் தலையை மட்டும் அசைத்தார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலின் போது ரசிகர் ஒருவர் செல்பி எடுத்த போது அவரின் செல் போனை பிடிங்கி பின்னர் கொஞ்ச நேரம் கழித்து அவரிடம் திருப்பி கொடுத்தார். அந்த வீடியோ பெரும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement