முதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி.! சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.!

0
3567

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவருக்காக எதையும் செய்யும் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி உறுதி செய்து தான் வருகின்றனர்.

பொதுவாக அஜித் தனது ரசிகர்களுக்காக அதிக நேரங்களை ஒதுக்குவதில்லை. அதே போல அஜித்தை பொறுத்த வரை ரசிகர்கள் அவர்களது வேலையை பார்க்க வேண்டும், படம் வந்தால் மட்டுமே அதனை அவர்கள் சினிமாவில் கண்டு களிக்கலாம் என்பதே அவரது கொள்கை.

- Advertisement -

அதே போல அஜித் பொது இடங்களில் வருவது மிகவும் அரிதான ஒரு விடயமாகும். தல அஜித் என்றாலே ரசிகர்கள் கொண்டாட்டம் தான் அதுவும் அவருடன் செல்பி எடுத்துக் கொள்வது ரசிகர்களின் கனவு என்று கூட கூறலாம். தற்பொழுது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக தானும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கள் பிரபலமாகி வருகிறது.

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். என்னதான் அஜித் படத்தில் பிசியாக இருந்தாலும் அடிக்கடி வெளியில் தனது சொந்த வேலைக்காக வருவது வழக்கம். அதே போல  பிசியாக இருந்தாலும் தனது ரசிகர்களுக்கு என்று நேரத்தை  ஒதுக்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே அஜித்தின் மிகப்பெரிய சந்தோஷம் என்று கூறலாம்.

-விளம்பரம்-
Advertisement