தனது படத்தின் ட்ரோன் காட்சிகளை எடுத்துள்ள அஜித். இதான் அந்த காட்சி. புகைப்படம் இதோ.

0
1067
ajithvis
- Advertisement -

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார் தல அஜித். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை, விஸ்வாசம் ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-
Image

அஜித்துக்கு நடிப்பை தாண்டி கார்,பைக் என்றால் மிகுந்த ஆர்வம், அதே போல அஜித் ஹெலிகாப்டர் கூட ஒட்டியுள்ளார் என்ற தகவல் கூட இருக்கிறது. பொதுவாக அஜித், படப்பிடிப்பு தளத்தில் பிரியாணி செய்து கொடுப்பார் என்பது தான் பலருக்கும் தெரியும். ஆனால், அஜித் தனது படத்தின் படப்பிடிப்பை கூட எடுத்துள்ளார் என்பது தான் சமீபத்தின் ஹட் நியூஸ்.

- Advertisement -

அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘விஸ்வாசம்’ படம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் டைட்டில் கார்ட்டில் வரும் ட்ரொன் காட்சிகளை அஜித் தான் எடுத்துள்ளாராம். அது சம்மந்தமான புகைப்படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் சார்பில் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க 200 வார்டுகளிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க பவர் பிரையர் உட்பட 500 இயந்திரங்களை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு அலுவலர்கள் உட்பட பெரிய பெரிய கட்டிடங்களில் 75 ஜெட்ராடிங் எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த எந்திரம் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்டது. மேலும், இந்த குழுவின் ஆலோசகராக இருந்தது அஜித் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement