அப்பா எப்படி இருக்கார், போன் செய்துள்ள பேரரசு, அஜித் கெட்டப் பெயரை சொல்லி மாஸ் பதில் கொடுத்துள்ள குட்டி தல.

0
427
ajithson
- Advertisement -

அஜித் மகன் குறித்து இயக்குனர் பேரரசு கூறி இருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் வலிமை படம் வசூலில் 300 கோடியை நெருங்கி சென்று இருந்ததாக தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறது.

- Advertisement -

ஏகே 61 படம்:

இந்த படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த படத்தின் சூட்டிங்கை ஜூலை மாதத்திற்குள் முடிக்க இருப்பதால் படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. படத்தில் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணி:

இதைத்தொடர்ந்து அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல 2 காதல் என்ற படம் வெளியாகி இருந்தது. படம் ரசிகர்கள் மத்தியிலே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் அஜித் மகன் குறித்த ஸ்பெஷல் ஆன தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அஜித்-ஷாலினி:

“அமர்க்களம்” படத்தின் போது ஷாலினி- அஜித் இருவரும் காதலித்தார்கள். பின் இரு வீட்டார் பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களுடைய கல்யாணம் நடைபெற்று இருந்தது. இவர்களுக்கு 2008இல் அனோஷ்கா என்ற அழகான பெண் குழந்தையும், 2015ம் ஆண்டு ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி அவர்கள் முழு வேலையையும் தன் குடும்பத்தை கவனிப்பதிலேயே அதிக நேரம் செலுத்தி வருகிறார். பெரும்பாலும் அஜித் தன்னுடைய பிள்ளைகளை மீடியாவில் இருந்து விலக்கி வைத்து இருக்கிறார்.

அஜித் மகன் குறித்து பேரரசு சொன்னது:

சமீபத்தில்கூட அஜித் தன்னுடைய மகனின் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அதற்கான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அவர்கள் அஜித்தின் மகன் குறித்து சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அது என்னவென்றால், சமீபத்தில் பேரரசு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, விசுவாசம் படத்தின் நேரத்தில் நான் அஜித்தின் மகன் ஆத்விக் இடம் போன் மூலம் பேசினேன். அப்போது நான் அப்பா எப்படி இருக்கிறார்? என்று கேட்டேன். அதற்கு ஆத்விக், ‘தூக்கு துரை தான நல்ல இருக்காரு’ என்று கலாய்த்து பேசினார் என்று கூறியிருந்தார்.

Advertisement