தென்னிந்திய திரைப்பட உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார். நடிகர் அஜித் குமார் அவர்கள் தன்னுடைய வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் ஒன்றை கட்டி உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்ததை தொடர்ந்து அவர் இதற்கு பதிலளிக்கும் வகையில் மறுப்பு தெரிவித்துயுள்ளார். தமிழ் சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் சூப்பர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார்.அவரின் ரசிகர்கள் எல்லோரும் அவரை செல்லமாக ” தல” என்றுதான் அழைப்பார்கள். மேலும் திரையுலகினர் அவரை “அல்டிமேட் ஸ்டார்” என்றும் அழைப்பார்கள். மேலும், அஜித்குமாருக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது கூட சொல்லலாம்.
பொதுவாக அஜித் குமார் அவர்கள் தன்னுடைய திரைப்படங்களின் புரமோஷனுக்கோ ,எந்த ஒரு திரையுலக விழாவிற்கும் உட்பட எந்த ஒரு விழாக்களுக்கும் நேரில் செல்வதை தவிப்பார். அஜித்குமார் அவர்களை பார்க்க வேண்டுமென்றால் படப்பிடிப்பிற்காக அவர் செல்லும் இடத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். இதனால் தல ரசிகர்கள் எல்லாம் படப்பிடிப்பின் இடத்தில் காத்துக் கொண்டிருப்பார்கள். வேறு எங்கேயும் அவரை பார்க்க முடியாது என்பதால் தல ரசிகர்களுக்கு ஒரு வருத்தம். இதனால் டப்பிங் பணிகளுக்காக அஜித் குமார் அவர்கள் வெளியே இருக்கும் டப்பிங் ஸ்டுடியோகளுக்கு செல்லும்போது ரசிகர்கள் கூட்டம் அலை மோதுவதாலும் மற்றும், ரசிகர்கள் போட்டோ எடுக்கச் சொல்லி கேட்பதாலும் மேலும், இதனையெல்லாம் தவிர்ப்பதற்காக நடிகர் அஜித் தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் ஒன்றை கட்டி உள்ளார் என்று தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதனால் இனி டப்பிங்க்கு கூட வெளியில் செல்ல மாட்டார் என்று எண்ணம் தொன்றுகிறது.
இதையும் பாருங்க : கவின் குறித்து ட்வீட் செய்த வனிதா.! அடுத்து வனிதாவின் ஆதரவு இந்த போட்டியாளருக்கு தானாம்.!
இந்த தகவலை அறிந்த அஜித் குமார் அவர்கள் இது முற்றிலும் ஒரு தவறான செய்தி என்று மறுப்பு தெரிவித்தார்.இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் , அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்டபார்வை” படம் மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடியது. இந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் கூட்டணியில் அஜீத் நடிப்பில் ‘தல 60’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என இணையங்களில் தெரிவித்தார்கள். இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக திரைப்படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் காட்சிகளை கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தில் அஜீத் குமார் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளன. அஜித் குமார் அவர்கள் பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவற்றில் அதிகம் ஆர்வம் உடையவர். சினிமா துறையை விட அதிகமாக கூட பைக் ரேஸ்ஸை லவ் பண்ணுவார் என்று கூட சொல்லலாம். அந்தவகையில் அவருடைய எல்லா படத்திலும் ஒரு காட்சியிலாவது அவருடைய பைக் ரேஸ் சம்பந்தமான காட்சிகள் எடுக்கப்படும். அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்திலும் நடந்த ஸ்டன்ட் ரேஸ் காட்சிகளில் டூப் போடாமல் தலையே நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த தல 60 படத்திலும் ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய பைக் ரேஸ் காட்சிகள் இருக்கும் என தல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.