யாரும் போக கூடாதுனு தல ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு. ஷாலினி பிறந்தநாளின் DJ சொன்ன செம தகவல்.

0
41684
shalini
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவரை அதிகம் எல்லாரும் “பேபி ஷாலினி” என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால் நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B5KXxaDjac3/

நடிகை ஷாலினி அவர்கள் 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்து அஜித் அவர்களின் 25 வது படமான “அமர்க்களம்” படத்தில் நடித்து உள்ளார். ஷாலினி, அஜித் குமார் இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படத்தின் போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. மேலும், திருமணம் முடிந்து இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு நம்பர் 20 ஆம் தேதி ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டி இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

- Advertisement -

இதையும் பாருங்க : அச்சு அசலாக ஸ்ரீதேவி போலவே ஒரு நடிகையா ? புடவையில் சுண்டி இழுக்கும் போஸ்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஷாலினியின் பள்ளி தோழிகள் கூட பங்கேற்றனர். சொல்லப்போனால் ஷாலினிக்கு சர்பிரைஸ் கொடுக்க வேண்டும் என்று நடிகர் அஜித் ,ஷாலினியின் தாய் தந்தையரை சந்தித்து பள்ளிப்பருவத்தில் ஷாலினிக்கு நெருக்கமாக இருந்த நபர்கள் யார் யார் என்பதை அறிந்து கொண்டு அவர்களை மட்டும் ஷாலினியின் பிறந்தநாளுக்கு அழைப்பை விடுக்க சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற டிஜே கௌதம் ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

வீடியோவில் 30 நொடிகளில் இருந்து பார்க்கவும்

அதில், நான் தான் மஹத் திருமணத்திற்கு கூட DJ செய்திருந்தேன். என்னோட நண்பர் மூலம் தான் ஷாலினி மேடாமோட பிறந்தநாள் பங்க்சனுக்கு அழைப்பு வந்தது. அப்போது நாங்கள் தலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் வந்தது. மேலும், இந்த பங்க்சனுக்கு ஷாலினி மேமோட பழைய நண்பர்கள் மற்றும் டீச்சர்ஸ் எல்லாம் வந்திருந்தாங்க. அந்த பங்க்ன்சனல தல உள்ள வந்ததும் முதலில் வரவேற்றது நாங்க தான்.

அங்கே உள்ள அனைவரையும் அவர் வரவேற்று கண்டிப்பாக சாப்பிட்டு தான் போக வேண்டும் என்று சொல்லிட்டாரு. அவரு அவ்வளவு பிரென்லியான ஆளு. மேலும், அந்த போட்டோ அதே நாளில் போக கூடாது என்பதற்காக அடுத்த நாள் தான் கொடுத்தாங்க. மேலும், படத்துல தல கெட்டப் வெளிய தெரிஞ்சிட கூடாதுனு இருந்தாங்க. ஆனால், சாப்பாடு என்று வந்துவிட்டால். அவர் சொன்ன விதம் இருக்கே. சாப்பிடாம யாரும் இங்க இருந்து போக கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா இருந்தாரு. அந்த அளவிற்கு சாப்பாடு விஷயத்தில் அவ்வளவு அழகா கவனிச்சாறு என்று கூறியுள்ளார்.

Advertisement