அமர்க்களம் முதல் வீரம் வரை – அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களின் கன்னட ஹீரோக்கள் இவங்க தான்.

0
55334
veeram
- Advertisement -

பொதுவாகவே திரையுலகில் ஒரு மொழியில் வெளி வரும் திரைப்படம் மெகா ஹிட்டாகினால், அந்த படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கி மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும். இது எல்லா மொழியிலும் நடந்து வருகிறது. அதுவும் வாங்கவிருக்கும் படம் அந்த மொழியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலோ அல்லது மிக வித்தியாசமான கதைக் களம் கொண்ட படமாக இருந்தாலோ, அதன் ரீமேக் ரைட்ஸை வாங்க பல நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போடுவார்கள்.

-விளம்பரம்-

அப்படி பலத்த போட்டி இருக்கும் போது, அந்த ஒரிஜினல் படத்தின் ரீமேக் ரைட்ஸின் விலையும் கூடுதலாக சொல்லி விற்கப்படும். இந்த மாதிரி சம்பவங்கள் பல நம் திரையுலகில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது நமக்கு கிடைத்திருக்கும் ஒரு செய்தி என்னவென்றால் தமிழ் திரையுலகில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டான ‘தல’ அஜித்தின் சில படங்கள், கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அந்த படங்களின் பட்டியல் பின்வருமாறு.

- Advertisement -

1999-யில் தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘அமர்க்களம்’. சரண் இயக்கியிருந்த இந்த படத்தில் அஜித், ஷாலினி ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் 2001-ஆம் ஆண்டு ‘அசுரா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. எஸ். மகேந்தர் இயக்கிய இதன் ரீமேக் வெர்ஷனில் ஷிவராஜ் குமார், தாமினி ஜோடியாக நடித்திருந்தனர்.

2001-யில் தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘தீனா’. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் அஜித், லைலா ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் 2002-ஆம் ஆண்டு ‘தும்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. ராம் தல்லூரி இயக்கிய இதன் ரீமேக் வெர்ஷனில் சுதீப், ரக்ஷிதா ஜோடியாக நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

2006-யில் தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘வரலாறு’. கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அஜித், அசின் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் 2012-ஆம் ஆண்டு ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. சேது ஸ்ரீராம் இயக்கிய இதன் ரீமேக் வெர்ஷனில் உபேந்திரா, சௌந்தர்யா ஜெயமாலா ஜோடியாக நடித்திருந்தனர்.

2014-யில் தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘வீரம்’. சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் அஜித், தமன்னா ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ‘ஓடேயா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. எம்.டி. ஸ்ரீதர் இயக்கிய இதன் ரீமேக் வெர்ஷனில் தர்ஷன், சனா ஜோடியாக நடித்திருந்தனர்.

Advertisement