திருமணத்திற்கு நேரில் செல்லவில்லை என்றாலும் தன் படத்தில் நடித்த நடிகருக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்

0
545
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகின்றது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த இருந்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது தல அஜித் அவர்கள் வலிமை என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். வினோத் குமார் இயக்குகிறார். கொரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளிவந்த அம்மா பாடலின் ப்ரோமோஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வலிமை படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திரையரங்குக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. வலிமை படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் பல எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் கார்த்திகேயனுக்கு அஜீத் அவர்கள் திருமண விருந்து கொடுத்து இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்திக்கேயாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இதற்கு நடிகர் அஜீத் அவரை போன் மூலம் தொடர்பு கொண்டு திருமண வாழ்த்து கூறியிருந்தார். மேலும், சென்னையிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு விருந்துக்காக கார்த்திகேயாவும் அவருடைய மனைவியையும் அழைத்து இருக்கிறார். இது கார்த்திக்கேயாவுக்கும் அவருடைய மனைவி லோகிதாவுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவருடைய நடிப்பில் தற்போது ராஜா விக்ரமாதித்தன் என்ற படம் உருவாகி இருக்கிறது. இதனிடையே நடிகர் கார்த்திகேயா அவர்கள் சமீபத்தில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன் விழாவில் தன்னுடைய காதலிக்கு ப்ரொபோஸ் செய்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறி தற்போது குடும்பத்துடன் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement