துணிவு படத்தில் அஜித் Dope போட்டு நடித்துள்ளார் என்று எழுந்த விமர்சனங்களுக்கு அந்த படத்தில் பணியாற்றிய நடிகரே விளக்கம் கொடுத்துள்ளார். கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், எல்லாம் வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாருடன் கைகோர்த்து தற்போது உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் “சில்லா சில்லா” பாடலும் “காசேதான் கடவுளடா” என்ற இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்து வரும் பொங்களன்று திரையில் வெளியாக உள்ளது.
மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடித்த “வாரிசு” படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஒன்றாக வெளியாக இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் இன்னமும் துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. தற்போது துணிவு படக்குழு, படத்தின் ப்ரோமோஷனுக்காக வேற லெவல் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அதன்படி வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து குதித்து அந்தரத்தில் பறந்தபடி துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டனர்.
#Thunivu Actor About Dope Scene In #Thunivu pic.twitter.com/L1gBpP4fQn
— chettyrajubhai (@chettyrajubhai) January 4, 2023
நடிகர் அஜித் குமார் அவர்கள் எப்போதும் தான் நடிக்கும் படங்களில் பைக் ஸ்டண்ட் மற்றும் சில சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். அது போல இந்த வலிமை படத்தில் பல பைக் ஸ்டண்ட் காட்சிகளில் அஜித் ரிஸ்க் எடுத்து நடித்தார். ஆனால், அஜித் படங்கள் என்றாலே அதில் பைக் காட்சி இருக்கும் என்ற விஷயம் போக போக கேலிக்கு உள்ளானது. இதனால் துணிவு படத்தில் பைக் காட்சிகள் பெரிதும் இடம்பெறவில்லை. Jet Ski
மாறாக கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது, துணிவு பட ட்ரைலரில் கூட அஜித் ஒரு ஜெட்ஸ்கியை ஓட்டி செல்வது போல ஒரு காட்சி இடம்பெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் அந்த காட்சியில் வருவது அஜித்தே இல்லை என்றும் இந்த படத்தில் பல ஸ்டண்ட் காட்சியில் அஜித்துக்கு பதில் நடித்தது வேறு ஒரு நபர் என்றும் நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வந்துகொண்டு இருந்தனர்.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள விஷ்வானத் என்பவர் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் ‘அஜித் dope போட்டு நடித்தார் என்று சொல்வது ரொம்ப தப்புங்க, நான் அந்த காட்சி எடுத்த போது அங்கு தான் இருந்தேன் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஸ்பீட் போட்டில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் படப்பிடிப்பு செய்தார்கள். அஜித் சார் தான் அதை ஓட்டினார். வெறும் ஒரு நிமிட காட்சிக்கு 10 15 மணி நேரம் எடுத்தார்கள் அந்த காட்சிக்காக அவர் எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன் எனவே இது மாதிரி கேடு செய்யும் போது எப்படி மக்கள் இப்படி பேசலாம் என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.