அஜித் முதல் கெளதம் கார்த்திக் வரை – ஒரே படத்தில் நடிகைகள் மீது காதலில் விழுந்து திருமணம் செய்த நடிகர்கள்

0
1760
- Advertisement -

ஒரே படத்தில் நடித்த நடிகர்- நடிகை திருமணம் செய்திருக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் நடிக்கும் நடிகைகள், நடிகர்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பது வழக்கமான ஒன்றுதான். அதுவும் ஒரே படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் காதலித்தாலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்த வகையில் ஒரே படத்தில் இணைந்து நடித்து திருமணம் செய்து கொண்ட நடிகர்களின் பட்டியல் தான் தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அஜித்- ஷாலினி:

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கம் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனிடையே இவர் நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து அமர்க்களம் என்ற படத்தில் நடித்தார்கள். இந்த படத்தின் போதுதான் இருவருக்கும் மத்தியில் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் 23 வருடங்களாக பிரியாத பிரபலமான ஜோடியாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ஆர்யா- சாயிஷா:

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக ஆர்யா திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஆர்யா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், இவர் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த டெடி என்ற படத்தில் ஆர்யா- சாயிஷா இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இவர்களுடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் கவர்ந்தது. அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இருவரும் காதலித்தார்கள். பின் இரு வீட்டார் சம்பந்தத்துடன் 2019 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது.

ஆதி- நிக்கி கல்யாணி:

ஆதி தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதேபோல் நிக்கி கல்ராணியும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர்கள் இருவரும் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் திரில்லர் படமான மரகத நாணயம் படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படத்தின் மூலம் இருவருக்கும் மத்தியில் நல்ல நட்புறவு ஏற்பட்டது. பின் இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள். கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

-விளம்பரம்-

கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். அதேபோல் மஞ்சிமா மோகனம் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து தேவராட்டம் என்ற படத்தில் தான் நடித்தார்கள். அந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் மத்தியில் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின் இவர்கள் சில ஆண்டுகள் நண்பர்களாக பழகி அதற்கு பிறகு தங்களுடைய காதலை வெளிப்படையாக கூறியிருந்தார்கள். கடந்த ஆண்டு இறுதியில் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

பகத் பாஸில்- நஸ்ரியா:

இவர்கள் இருவருமே மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் மத்தியில் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம் காதல் மலர்ந்தது. பின் இவர்கள் வயது வித்தியாசம் கூட பார்க்காமல் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் நஸ்ரியா படங்களில் அதிகமாக நடிப்பதை குறைத்துக் கொண்டு தன்னுடைய குடும்பத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர்கள் பிரபலமான ஜோடிகளாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Advertisement