வெளியான ஆதி -நிக்கி நிக்கி கல்ராணி திருமணம் தேதி, அஜித் வராரா? உண்மையை உடைத்த ஆதி.

0
490
Aadhi
- Advertisement -

ஆதி- நிக்கி கல்ராணி திருமண தேதி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நிக்கி கல்ராணி. இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஒரு மாடலிங் மூலம் தான் சினிமா உலகிற்குள் நுழைந்தார். அதன் பின் இவர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த டார்லிங் என்ற படத்தின் மூலம் தான் நிக்கி கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், டார்லிங் படத்திற்கு முன்பாகவே நிக்கி கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பிற மொழியில் சில படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் வெளிவந்து இருந்த ராஜவம்சம் படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்து இருந்தார்கள். கிராமத்து பின்னணியை மையமாக கொண்ட படமாக ராஜவம்சம் அமைந்திருந்தது.மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதன் பின் நிக்கி கல்ராணி அவர்கள் மிர்ச்சி சிவாவுடன் இடியட் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

நிக்கி கல்ராணியின் திரைப்பயணம்:

இந்த படம் முழுக்க முழுக்க காமெடி பேய் படம். இருந்தாலும் பெரிய அளவில் இந்த படம் வெற்றி அடைய வில்லை. இதனை தொடர்ந்து நிக்கி அவர்கள் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே நிக்கி அவர்கள் பிரபல நடிகரை திருமணம் செய்து கொள்ள போகும் தகவல் வெளியாகி இருந்தது. அவர் வேற யாரும் இல்லைங்க, நடிகர் ஆதியை தான் நிக்கி கல்ராணி திருமணம் செய்ய போகிறாராம். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ஆதி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஆதியின் திரைப்பயணம்:

மேலும், மரகதநாணயம், யாகவராயினும் நாகாக்க போன்ற படங்களில் ஆதி உடன் நிக்கி கல்ராணி நடித்திருந்தார். இந்த படங்களின் போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால், வெளியில் சொல்லாமல் இருந்தார்கள். பின் கடந்த மார்ச் 24 ஆம் தேதி சென்னையில் ஆதி, நிக்கி கல்ராணி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. மேலும், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக முடிந்து இருந்தது.

-விளம்பரம்-
nikki

ஆதி-நிக்கி நிச்சயதார்த்தம்:

இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலானதை பார்த்த பலரும் வாழ்த்துக்களைக் கூறி திருமண தேதி எப்போது என்று கேள்வி கேட்டிருந்தார்கள். இந்த நிலையில் நிக்கி கல்ராணி – ஆதி இவர்களின் திருமண தேதி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மே 18ஆம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடக்க இருக்கிறது. இது குறித்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்கள். அதில் நிக்கி கல்ராணி கூறியிருப்பது, மே 18ஆம் தேதி எங்கள் திருமணம் நடக்க இருக்கிறது.

திருமணம் குறித்து ஆதி அளித்த பேட்டி:

திருமணத்திற்க்கு பிறகு நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணமான பிறகு பெண்கள் மாற வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அவர்களாகவே இருந்தால் போதும். ஆனால், நல்லபடியாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஆதியிடம் அஜித்திற்கு திருமண அழைப்பிதழ் வைத்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆதி, அஜித் சாருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து இருக்கிறோம். அவர் வருவாரா? இல்லையா? என்பது தெரியவில்லை என்று கூறி இருக்கிறார். அஜித் ஏகே 61 படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement