18 வருடங்கள் கழித்து மீண்டும் அஜித் எடுக்கும் அவதாரம் – என்ன தெரியுமா?

0
190
- Advertisement -

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் புது படத்திற்கான அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருந்தார்கள். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

அஜித் திரைப்பயணம்:

மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் பின் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது.

விடாமுயற்சி படம்:

இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். ஏற்கனவே அஜித்- திரிஷா இருவரும் இணைந்து ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருப்பதாகவும், சில இடங்களில் எமோஷன் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் விடாமுயற்சி கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் இறந்தார். இது விடாமுயற்சி படகுழுவினருக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. அவருடைய மறைவிற்கு பிறகு பட வேலைகள் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பித்து விட்டார்கள். தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் பைக் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அஜித்தின் புதிய படம் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார்.

அஜித் புது படம் அப்டேட்:

மைத்திரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த படம் குட், பேட், அக்லி என்ற தலைப்பில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜூன் மாதம் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் அவர்கள் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த வரலாறு படத்தில் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து 18 வருடங்கள் கழித்து மீண்டும் மூன்று வருடத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement