பேருந்தில் மக்களோடு மக்களாக எளிமையாக சென்ற வலிமை நாயகன் அஜித் – இன்றைய ட்ரெண்டிங் வீடியோ.

0
262
ajith
- Advertisement -

மக்களோடு மக்களாக மிக எளிமையாக அஜித் பஸ்ஸில் பயணித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தன்னுடைய விடா முயற்சியினால் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று இந்த படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏகே 61 படம்:

இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். சமீபத்தில் அதற்கான புகைப்படங்கள் செய்து வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது.

ஏகே 61 படம் குறித்த தகவல்;

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படம் ஒரு வங்கி சம்பந்தமான பிரச்சனையை மையமாக கொண்ட கதை என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், ராஜதந்திரம் வீரா உட்பட பல நடிகர்கள் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அஜித் குறித்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ :

சமீப காலமாகவே நடிகர் அஜீத் குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அஜித்தின் ஏகே 61 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதற்காக இன்று காலை நடிகர் அஜீத் அவர்கள் விசாகப்பட்டினம் செல்ல சென்னை விமான நிலையம் வந்திருந்தார். விமான நிலையத்தில் இருந்து விமானம் இருக்கும் இடத்திற்கு செல்ல பயணிகள் அனைவரையும் பஸ் ஒன்றில் அழைத்துச் செல்வார்கள்.

அஜித்தின் எளிமை:

அப்படி அஜீத் ஒரு பேருந்தில் மக்களோடு மக்களாக பயணித்து விமானத்தில் ஏற சென்றிருக்கிறார். அந்தப் பேருந்தில் கூட்டமாக இருந்த போதிலும் அஜித் மிகவும் எளிமையாக நின்றபடியே பயணித்திருக்கிறார். அந்த பேருந்தில் நின்றபடி அஜித் பயணித்த போது எடுத்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மக்கள் கூட்டத்தை பார்த்தாலே பயந்து ஓடும் பிரபலங்கள் மத்தியில் மக்களோடு மக்களாக ரொம்ப எளிமையான மனிதராக அஜித் இருப்பதை பார்த்து பலரும் வியந்து போய் பாராட்டி வருகின்றனர்.

Advertisement