தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.
தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் ‘தல, தளபதிக்கு’ ரசிகர்கள் அதிகம்.உண்மையிலேயே அஜித்தும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.
ஆரம்ப காலத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்களது படங்களில் மாறி மாறி வசனங்களை பேசி இருக்கின்றனர். அவை எல்லாம் இயக்குனர்கள் எழுதிய வசனம் தான் என்றாலும் விஜய்-அஜித் ரசிகர்கள் அதை ஒரு வசன யுத்தமாக தான் பார்த்தனர். ஆனாலும், இந்த ரசிகர்கள் சன்டை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அஜித்தை விஜய் ரசிகர்கள் திட்டுவதும் விஜய்யை அஜித் ரசிகர்கள் திட்டுவதும் வாடிக்கையாக தான் இருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் பல ஆண்டுகள் கழித்து விஜய் – அஜித் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது. தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்திலும், அஜித், எச் வினோத் இயக்கத்தில் துனிவு படத்திலும் நடித்து இருக்கின்றனர். விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் கடைசி படம் தோல்வி அடைந்ததால் வாரிசு மற்றும் துணிவு படம் விஜய் அஜித்துக்கும் ஒரு முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.
இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படங்களுக்கான ப்ரோமோஷன் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது அந்த வகையில் விஜயின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற இருக்கிறது. பொதுவாக விஜய் படங்களுக்கு பிரச்சனைகள் எழுவது வாடிக்கையான ஒன்று தான். மேலும், அப்படி படத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் இசை வெளியீட்டு விழாவில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் எதையாவது பேசிவிடுவார்.
இதனாலேயே விஜய் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் வாரிசு படத்துக்கும் பல பிரச்சனைகள் சென்று கொண்டு இருக்கிறது. இந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
மேலும், இந்த இசை வெளியீட்டு விழா நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபாரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் குவிந்த ரசிகர்கள் சில பேனர்களை எடுத்து வந்தனர். அந்த ஒரு பேனரில் ‘Studioல இருந்து ரிலீஸ் பண்ண இது என்ன ஆமை பாட்டா , Stadium போட்டு கொண்டாடுவோம் டா எங்க அண்ணன் பாட்ட’ என்று அஜித்தை மோசமாக விமர்சித்து இருக்கின்றனர்.