வாலி பட சீனை அப்படியே டான் படத்தில் வைத்த இயக்குனர் – Sj சூர்யா ஐடியாவா இருக்குமே – வைரலாகும் வீடியோ.

0
642
vaali
- Advertisement -

அஜித்தின் வாலி படத்தின் காட்சியை அப்படியே டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எந்த ஒரு சினிமா பின்னணியில் இல்லாமல் தன்னுடைய கடும் உழைப்பினால் தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, இவர் , தொகுப்பாளர், சிங்கர், என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த படம் டாக்டர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவிக்குமார் தான் அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

அதுமட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது.இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.

டான் படம் பற்றிய தகவல்:

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் டான் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் அவர்கள் டான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, இயக்குனர் கௌதம் வாசுதேவ்,எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

டான் படத்தின் ட்ரெய்லர்:

மேலும், டான் படத்திலும் சிவா ஒரு டூயட் பாடலை எழுதி இருக்கிறார். மேலும், இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இருந்தது. இந்த டிரைலர் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் கல்லூரியில் ரகளை செய்யும் சேட்டை மாணவராகவும், எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்திருக்கின்றனர்.. தான் என்னவாக வேண்டும்? என்ற தேடுதலில் சிவகார்த்திகேயன் இருக்கிறார் என்பதை காண்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் எஸ் ஜே சூர்யா இயக்கிய வாலி படத்தில் வரும் ஒரு காட்சியை அப்படியே டான் படத்தில் வைத்திருக்கின்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வாலி பட காட்சி:

அது என்னவென்றால், டான் படத்தில் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் சூர்யாவை பார்த்து நக்கலாக சிரித்த எதுவும் தெரியாதது போல முகத்தை மாற்றிக் கொள்வார். இதைப் பார்த்துட்டு ‘மாத்திட்டான் சார் மாத்திட்டான் சார்’ என எஸ்ஜே சூர்யா கோபமாக கூறுகிறார். இந்த காட்சி அஜித்தின் வாலி படத்தில் காட்டப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வாலி படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இரு காட்சிகளையும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள் .

Advertisement