தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.
https://twitter.com/itz_BillaOff/status/1327112092982288385
தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். படத்தின் அறிவிப்பு எப்போதோ வெளியானது ஆனால், வலிமை படத்தின் போஸ்ட்டர் கூட இன்னும் வெளியாகவில்லை.
இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர். இதை தொடர்ந்து 'வலிமை' பட அப்டேட் குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அஜித்தும் போனி கபூரும் இணைந்து 'வலிமை' படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுப்பார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
https://twitter.com/Dheena__Jeya/status/1344475358507139072
இப்படி ஒரு நிலையில் வலிமை படப்பிடிப்பு தளத்தில் எடுத்த குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பல மாதங்களாக அப்டேட் காத்திருந்த தல ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் ஒரு புத்தாண்டு பரிசை போல அமைத்துள்ளது.





