இந்தியில் ரீமேக் ஆகும் அஜித்தின் ‘வீரம்’.! அஜித் ரோலில் இந்த இளம் நடிகரா.!

0
1346
Ajith
- Advertisement -

சமீப காலமாக தமிழ் வெளியான பல படங்கள் இந்தியிலும் ரீ மேக் செய்யப்பட்டு வருகிறது. சூர்யா நடித்த கஜனி படம் துவங்கி சிங்கம், சிறுத்தை வரை இந்தியில் ரீ மேக் செய்யபட்டுள்ளது. இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம் ‘ திரைப்படம் இந்தியில் வெளியாக உள்ளது.

-விளம்பரம்-
Image result for akshay kumar

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அஜித், தமன்னா, நாசர், விதார்த், சிவா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தினை இந்தியில் ரீ மேக் செய்யப்போவதாகவும் அதில் அஜித்தின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்சய் குமார் நடிக்க போவதாகவும் தகவல்கள்வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் அக்சய் குமாருக்கு பதிலாக இளம் நடிகரான விக்கி கௌசலை தேர்வு செய்துள்ளனர்.

Vicky Kaushal replaces Akshay Kumar for Hindi remake of Tamil film 'Veeram'?

பொதுவாக ஒரு பெரிய நடிகர் நடித்து ஹிட்டான ஒரு படத்தை ரீ மேக் செய்யும் போது அந்த ஹீரோவிற்கு நிகரான நடிகரை தான் தேர்வு செய்வார்கள். அந்த வகையில் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு அக்சய் குமார் மிகவும் தகுதியானவர் தான். ஆனால், அவரை விடுத்து இளம் நடிகரை தேர்வு செய்துள்ளனர்.

-விளம்பரம்-

அக்சய் குமார் ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கிய ‘சிறுத்தை’ படத்தின் இந்தி ரீ மேக்கான ‘ரௌடி ரத்தோர் ‘ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த நிலையில் வீரம் ரீ மேக்கில் அக்சய் குமார் நடிக்க முடியாமல் போனதை எண்ணி அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement