விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருந்தார்கள். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.
அஜித் திரைப்பயணம்:
மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் பின் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது.
Vidaamuyarchi filming
— Suresh Chandra (@SureshChandraa) April 4, 2024
November 2023.#VidaaMuyarchi pic.twitter.com/M210ikLI5e
விடாமுயற்சி படம்:
இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். ஏற்கனவே அஜித்- திரிஷா இருவரும் இணைந்து ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
படம் குறித்த தகவல்:
இவர்களுடன் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருப்பதாகவும், சில இடங்களில் எமோஷன் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் விடாமுயற்சி கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் இறந்தார். இது விடாமுயற்சி படகுழுவினருக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. அவருடைய மறைவிற்கு பிறகு பட வேலைகள் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பித்து விட்டார்கள்.
அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து:
தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் பைக் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் விடாமுயற்சி சூட்டிங் ஸ்பாட் வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், அஜித் அவர்கள் காரில் ஸ்டண்ட் செய்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும் அஜித் பயப்படாமல் ஒன்றுமில்லை நன்றாக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.