ஆடுஜீவிதம் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் புகழ்ந்து பேசி இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் பிரித்திவிராஜ். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் நடித்து இருக்கிறார். தமிழிலும் இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் ஆடு ஜீவிதம்.
இயக்குனர் பிளஸ்ஸி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அமலா பால், கோகுல், Jimmy Jean-Louis உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் பலருமே பாராட்டி வருகிறார்கள். இந்த படம் மலையாள மொழியில் மட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் பதிவு:
இந்நிலையில் ஆடு ஜீவிதம் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஆடுஜீவிதம் அசல் மலையாள சினிமா. ஆழ்ந்த உணர்ச்சிகரமான அதிர்வுகளை படத்தில் காண்பித்து இருக்கிறார்கள். மலையாள சினிமாவின் செழுமையான வரலாற்றை பார்க்க முடிந்தது. இந்த வெற்றிக்கு காரணம் சாதாரண மக்களுடைய வாழ்க்கையை சிறப்பாக காண்பித்து இருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் உன்னதமான படங்களில் ஒன்றாக ஆடுஜீவிதம் இருக்கிறது.
மலையாளம் மொழி குறித்து சொன்னது:
தற்போது இந்திய சினிமாவில் மலையாளத்தை தவிர வேறு எந்த துறையுமே இந்த படத்தை இவ்வளவு அழகாக காட்ட முடியாது. பெங்காலி படங்களில் இது மாதிரி இருந்தது. ஆனால், தற்போது பெங்காலி பாரம்பரியம் இந்தியால் அழிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு இல்ல வேற மொழிகளில் கூட இப்படி எடுக்க முடியாது. ஒரு தமிழ் ரசிகர், படம் போர் அடிக்கிறது, சலிப்பானது, கதை பரபரப்பாக நகரவில்லை, இரண்டாம் பாதியில் புதிதாக எதுவும் நடக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
படம் குறித்து சொன்னது:
இந்த திரைப்படம் மனிதனுடைய பற்றாத உள் ஆற்றலை காண்பிக்கிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் மான் தன் சக்தியால் எப்படி சமாளிக்கிறது என்பதை தான் இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார்கள். நட்பு போராட்டத்தின் மூலம் உருவான ஒரு மாபெரும் மனித தருணங்களை சித்தரித்து இருக்கிறது. மலையாளத்தில் தலைசிறந்த படைப்புகளில் இந்த படமும் ஒன்று. இது ஒரு உண்மையான மலையாள படம். மலையாளிகள் தனக்கென ஒரு ஆளுமையை கொண்டவர்கள்.
மஞ்சுமோல் பாய்ஸ் படம் குறித்து சொன்னது:
நாம் அவர்கள் சிறந்த ஆய்வாளர்கள் என்று அழைக்கலாம். அந்த மனநிலையை காட்டுவதால் தான் ஆடுஜீவிதம் ஒரு சிறந்த மலையாள படம் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருந்தார். இப்படி மலையாள படத்தையும் மலையாளிகளையும் புகழ்ந்து பேசிய ஜெயமோகன் தான் சமீபத்தில் வெளியான மஞ்சுமோல் பாய்ஸ் படத்தின் போது மோசமாக விமர்சித்து பேசி இருந்தார். இதற்கு பலருமே கண்டனம் தெரிவித்து எழுத்தாளர் ஜெயமோகனை விமர்சித்தும் திட்டியும் இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் ஆடு ஜீவிதம் படத்தை பாராட்டி இருப்பது பலருக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.