விஸ்வாசம் படத்தின் டீசரை பார்த்த சென்சார் போர்டு பிரபலம்..!என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்..!

0
467
Visvasamthukkudurai

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகளை புரிந்திருந்தது.

இந்த படத்தின் நடிகர் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அஜித்தின் ஜோடியாக நடித்துள்ளார்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். மதுரை மற்றும் தேனிப் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் ,துபாயில் தணிக்கை குழுவின் முக்கிய உறுப்பினரான உமைர் சந்து என்பவர் இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு சிறிய விமர்சனம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு பதிவில், தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் டீசரை பார்த்தேன், ஒரு வார்த்தை தான் : Mind Blowwing என்று பதிவிட்டுள்ளார். மேலும், மற்றுமொரு பதிவில், விஸ்வாசம் படத்தின் டீசரை பார்த்தேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இது தான் அஜித் படத்திலேயே மிக பெரிய மாஸ் ஹிட். டீஸர் இன்னும் சிறுது நாளில் என்று பதிவிட்டுள்ளார்.