படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் ‘விஸ்வாசம் ‘ படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட சத்ய ஜோதி நிருவனம்..!

0
269
AjithVisvasam

நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்று வந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று மும்பையில் படமாக்கபட்டு வந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளது.சமீபத்தில் நடிகர் அஜித் இயக்குனர் சிவாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.

- Advertisement -

படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி வரும் பொங்கல் அன்று இந்த படம் வெளியாகும் என்று உறுதி செய்யபட்டுள்ளது. மேலும், தற்போது சத்ய ஜோதி நிறுவனம் வெளியியிட்ட தகவலின்படி ‘விஸ்வாசம்’ படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை நடிகர் அருண் பாண்டியனின் ஏ&பி நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த தகவலை ‘விஸ்வாசம்’ படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அருண் பாண்டியனின் ஏ&பி நிறுவனம் விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் ஓவர் சீஸ் உரிமத்தையும் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement