வெளியானது “விஸ்வாசம் ” படத்தின் அடுத்த அப்டேட்..!தல ரசிகர்கள் நாளை ரெடியா இருங்க…!

0
316
Visvasam

விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் டீஸர் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி இருந்தது. விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் திகைவைத்துள்ளது. ஆனால், அஜித் ரசிகர்கள் மட்டும் “விஸ்வாசம்” படத்தின் எந்த ஒரு அப்டேட் பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லாமல் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த படத்தில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் நடித்திருப்பது ஏற்கனவே அறிந்த விடயம் தான். மேலும், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நடிகர் ரோபோ ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் நடிகர் ரோபோ ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், சத்யா ஜோதி பிளம்ஸ்ஸிடம் நான் உரையாடினேன். படத்தின் அப்டேட் இன்று வெளியாகாது என்று உறுதிபடுத்தி விட்டனர்.எனவே, விஸ்வாசம் படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கி இருந்த அஜித் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தை அடைந்தனர்.

ஆனால், இந்த படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் பிரபல திரைப்பட பி ஆர் ஓ சுரேஷ் சந்திரா என்பவர் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை (அக்டோபர் 25) காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துள்ளனர்.