கர்நாடகத்தில் அதிக கெத்து காட்டிய தல படம். இதுவரை வேறு எந்த படமும் இப்படி செய்யல.

0
2845
Ajith
- Advertisement -

தென்னிந்திய அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் இந்த வருடம் அதாவது 2019 ஆம் ஆண்டு வந்த இரண்டு படங்களும் வேற லெவல்ல தெறிக்க விட்டது. இந்நிலையில் அஜித் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் அஜித் ரசிகர்கள் ரொம்ப சோகமாக இருந்தார்கள். இதனை தொடர்ந்து 2019 ஆம் வருடம் அஜித் அவர்கள் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதை அறிந்த ரசிகர்கள் பயங்கர குஷியில் கொண்டாடி வந்தார்கள். மேலும்,இந்த வருடம் பொங்கல் பண்டிகையன்று ‘விஸ்வாசம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி பட்டையை கிளப்பியது. இயக்குனர் சிவா எழுதி,இயக்கியும் மற்றும் தியாகராஜன் தயாரிக்கப்பட்ட படம் தான் விஸ்வாசம். இந்த படத்திற்கு சீமான் அவர்கள் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் அஜீத் குமார், நயன்தாரா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-
viswasam

மேலும்,இந்த படத்தில் அப்பா-மகள் சென்டிமென்ட்டை செம்ம மாஸாக காட்டி இருக்கிறார் இயக்குனர். மேலும், விஸ்வாசம் படத்தை தல ரசிகர்கள் மட்டுமில்லாமல் குடும்பங்கள் கொண்டாடிய படம் எனவும் கூறினார்கள். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி ‘நேர்கொண்ட பார்வை’ படம் வேற லெவல் இருந்தது. மேலும்,நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை வினோத் என்பவர் எழுதி இயக்கினார். இந்த படம் ஹிந்தியில் ‘பிங்க்’ என்ற தலைப்பில் கதையை தழுவி இருந்ததாம். அதுமட்டுமில்லாமல் தமிழில் போனிகபூர் தயாரித்தார். மேலும்,இந்த படத்தில் அஜித் அவர்கள் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவில் அவருடைய கதாபாத்திரம் இருந்தது.

- Advertisement -

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் படம் என்ற பட்டங்களை தட்டிச் சென்றது என்று சொல்லலாம். இந்நிலையில் ‘விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமே மக்களிடையேயும், ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்தது. இந்த இரண்டு படமே இந்த வருட டாப் ஹிட் பட வரிசையில் உள்ளது கூட சொல்லலாம். இந்நிலையில் அஜித் அவர்கள் நடித்த விஸ்வாசம் படத்தை கன்னட மொழியில் “ஜக மல்லா” என்ற பெயரில் டப் செய்து அண்மையில் வெளியிட்டார்கள். மேலும், அஜித் நடித்த விஸ்வாசம் படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னட மொழியிலும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது என தெரிய வந்துள்ளது.

Image result for viswasam in kannada"

மேலும், கன்னட மொழியிலும் டாப் ஹிட் வரிசையில் “ஜக மல்லா” படம் தேர்வானது என்றும்,இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் அதிக லாபம் கொடுத்த தமிழ் படம் விஸ்வாசம் என்ற பெருமையையும் தந்தது என கூறினார்கள். மேலும்,விஸ்வாசம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் வெறித்தனமாக திரையரங்குகளில் ஓடியது என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தல அஜித் அவர்கள் “தல 60” என்ற ஒரு புதுப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. மேலும், இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் மீண்டும் இந்த படத்தில் இணைந்து உள்ளார்கள் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது என அறிவித்தார்கள். அதோடு இந்த படத்தில் அஜித் அவர்கள் இரு வேடங்களில் நடிக்க உள்ளார் என்றும், அதுவும் இந்த படத்தில் அஜித் அவர்கள் போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இந்த படத்திற்காக அஜித் அவர்கள் நிறைய உடற்பயிற்சிகள் மேற்கொண்டு உள்ளார் என்றும் கூறுகிறார்கள். மேலும், படத்திற்குரிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

Advertisement