சார், இந்த படத்தை ரீ -மேக் செஞ்சா நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன். மகேந்திரனிடம் கூறியுள்ள அஜித்.

0
1722
rajini
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 1980 ஆம் ஆண்டு வெளியான படம் “பில்லா”. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்த படத்தில் நடித்திருந்தனர்.இந்த படத்தை 2007 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தல அஜித்தை வைத்து ரீமேக் செய்தார்கள். அஜீத் அவர்களின் திரைப் பயணத்தில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்த படங்களுள் இந்த பில்லா படமும் ஒன்று என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் தற்போது தல அஜித் அவர்கள் புகழின் உச்சத்தில் இருக்க இந்த படமும் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஆனால், அஜித்திற்கு ரஜினியின் வேறு ஒரு ரஜினி படத்தின் ரீ- மேக்கில் நடிக்க ஆசையாக இருந்ததாம். அதுவும் பிரபல இயக்குனர் மஹேந்திரன் இயக்கத்தில் தான் அஜித் ஆசைப்பட்டாராம். சொல்லப்போனால் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்திற்கு பின்னர் இயக்குனர் மகேந்திரன் அஜித்திற்காக ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்தார் ஸ்போர்ட்ஸ் கதையாக எடுக்கப்பட இருந்த அந்த கதையில் நடிக்க முடியாமல் போனது.

இதையும் பாருங்க : என்ன சொல்றீங்க, இரண்டாம் திருமணமா ? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சோனியா அகர்வால்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மகேந்திரன் மகனும் இயக்குனருமான ஜான் மகேந்திரன் பேட்டி ஒன்றில் பேசிய போது அஜித் குறித்த சுவாரசியமான விஷயம் ஒன்றை தெரிவித்திருக்கிறார். அஜித்திற்கு ஜானி படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்பது ஆசை. இதற்காக அப்பாவை அவர் சந்தித்து இருக்கிறார். மேலும், ஜானி படத்தை நீங்கள் ரீமேக் செய்தால் அதில் நானே நடிக்கிறேன் அந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் அப்பாவிடம் கூறியிருக்கிறார் அதேபோல அப்பாவும் ஜானி படத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எண்ணினார்.

அதேபோல அஜித் அப்பாவின் இயக்கத்தில் தான் அந்த படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அது மட்டும் இல்லை அந்த படத்தில் நடிக்க ஆசை படுவது மட்டும் அல்லாமல் அந்த படத்தை நானே தயாரிக்க விரும்புவதாகவும் அஜித் அப்பாவிடம் கூறினார். ஆனால், ஏதோ ஒரு கட்டத்தில் ஏற்கனவே எடுத்த ஒரு படத்தை ரீமேக் செய்ய வேண்டாம் என்று அந்தப் படம் கைவிடப்பட்டது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement