தல அஜீத்துக்கு ரஜினியின் நடிப்பில் சூப்பர் ஹிட் கொடுத்த படத்தில் நடிக்க ரொம்ப நாள் கனவு. தற்போது இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள். தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வருபவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வந்த எல்லா படங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. சமீபத்தில் கூட இவருடைய நடிப்பில் வந்த “விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை” ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் அளவில் ஹிட் கொடுத்தது. அது மட்டும் இல்லாமல் விஸ்வாசம் படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் கூட மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் அள்ளித் தந்தது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 1980 ஆம் ஆண்டு வெளியான படம் “பில்லா”. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தை 2007 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தல அஜித்தை வைத்து ரீமேக் செய்தார்கள். அஜீத் அவர்களின் திரைப் பயணத்தில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்த படங்களுள் இந்த பில்லா படமும் ஒன்று என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் தற்போது தல அஜித் அவர்கள் புகழின் உச்சத்தில் இருக்க இந்த படமும் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறி வருகிறார்கள். 1980 ஆம் ஆண்டு ரஜினியின் பில்லா படத்திற்கு எப்படி மக்களிடையே வரவேற்பு கிடைத்ததோ, அந்த அளவிற்கு ரீமேக் செய்த அஜீத் நடித்த பில்லா படத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், முதலில் ரஜினியின் பில்லா படத்தை ரீமேக் செய்யும் போது அஜீத் அவர்களுக்கு அதிக அளவு ஈடுபாடு இல்லை என்றும் கூறினார்கள். பின்னர் தான் அஜீத் நடித்தாராம். ஆனால், அவருக்கு ரஜினி நடிப்பில் 1981ஆம் ஆண்டு வெளிவந்த தீ படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்று தான் அவருடைய நீண்ட நாள் ஆசையாம்.
இதையும் பாருங்க : இரவினில் ஆட்டம் பாட்டம். ஆண் நண்பரின் தலையில் ஏறி அமர்ந்த காஜல். வைரலாகும் புகைப்படம்.
இந்த படம் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவான படமாகும். இந்த படத்தை சுரேஷ் பாலாஜி அவர்கள் தயாரித்தார்கள். இந்த படம் அப்போது 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையரங்கில் பட்டையை கிளப்பியது. ரஜினிகாந்த் வாழ்க்கையின் மாற்றத்திற்குக் காரணமான படங்களில் இந்த படமும் ஒன்று. அப்போது சூப்பர் ஹிட் கொடுத்த தீ படத்தை இப்போதிருக்கும் காலகட்டத்திற்கு சரியாக பொருந்தாது என்ற காரணத்தினால் தான் பில்லா படத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்று கூறுகிறார்கள். ஆனாலும் அஜீத் அவர்களுக்கு தீ படத்தின் மீது தான் ஒரு கண்ணு. அதனால் அஜித்தை வைத்து தீ படம் ரீமேக் பண்ணுவார்களா?? என்பது பொறுத்திருந்து தான் பார்க்கணும்.
தற்போது தல அஜித் அவர்கள் “வலிமை” என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் குமார் இயக்குகிறார். மேலும், போனிகபூர் அவர்கள் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் அஜித் அவர்கள் இரு வேடத்தில் நடிக்கிறார். அதுவும் போலீஸ் கதாபாத்திரத்தில் அவருடைய லுக் வேற லெவல் உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் திரையரங்கிற்கு வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்கள்.