தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். இவரை ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என்று தான் அழைப்பார்கள். நடிகர் அஜித் மற்றும் ஷாலினிக்கு அனோஷ்கா என்ற அழகான மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளார்கள். எப்பவுமே நடிகர் அஜித் அவர்கள் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா பட புரமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை. அதோடு அவர் தன் குழந்தைகளையும் மீடியா பக்கம் கொண்டு வருவதில்லை. சொல்லப் போனால் மீடியா வாசனையே இல்லாமல் வளர்த்து வருகிறார் என்று கூட சொல்லலாம்.
மேலும், கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் விஸ்வாசத்தில் தன் மகளின் பாசத்திற்கு ஏங்கும் அப்பாவாக அஜித் கலக்கியிருப்பார்.
அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அஜித் தன் மகள் மீது அதிக அன்பு கொண்டவர். இந்நிலையில் தல அஜித் தன் மகள் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு மேடையில் தன் மகள் நடிக்கும் அழகை பார்த்து வியந்து உள்ளார். இதுவரை யாரும் காணாத அறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போது தல அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாகி வருகிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள். சமீப காலமாகவே தல அஜித் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் தற்போது இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்தில் நடிக்கிறார்.