தமிழ் சினிமா பிரபலங்களில் பல தம்பதியர்கள் இருந்து வந்தாலும் அஜித்- ஷாலினி ஜோடி தான் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் சினியர் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி.தனது சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஷாலினி ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துவந்தார்.பின்னர் அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது நமக்கு தெரியும். திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.
Rare unseen video of #ShaliniAjith, Singing song in a stage!! pic.twitter.com/Rm7ugFsTSP
— AJITH GIRLS FAN CLUB (@AjithGirlsFC) September 24, 2018
திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. கடைசியாக பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை ஷாலினி அதன் பின்னர் இவரை திரையில் காண முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளிலும், தனது கணவருடனும் வெளியே செல்லும் போது மட்டும் இவரை காண முடிகிறது.
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பை தாண்டி பைக் மாற்றும் கார் ஓட்டுவதில் கில்லாடி என்பது தெரியும். அதே போல நடிகை ஷாலினியும் நடிப்பை தாண்டி பாடுவதிலும் திறமையானவர். அஜித் நடித்த “அமர்க்களம் ” படத்தில் சொந்த குரலில் பாட என்ற பாடலை பாடி இருந்தார் என்பது அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், நடிகை ஷாலினி ஒரு மேடையிலும் பாடி அசத்தியுள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. சமீபத்தில் ஷாலினி, மேடையில் பாடிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.