என் மேல் நானே ப்ரஷர் போட்டுக்கொள்ளவிரும்பவில்லை – வலிமை படத்திற்கு பின் அஜித் எடுத்துக்கொள்ளப்போகும் பிரேக்.

0
7044
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். தற்போது தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து ஒரு செமயான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தல ரசிகர்கள் எல்லாம் மிகுந்த கவலையில் உள்ளார்கள். இந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-
அஜித்குமார்

இந்த படத்தின் பணிகள் எப்போதோ நிறைவடைந்த நிலையில் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித் சைக்கிளில் பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. அஜித்துடன் சைக்கிளிங் சென்றுள்ள சுரேஷ் என்பவர் அஜித்தின் இந்த பயணம் பற்றி பதிவிட்டுள்ளார். அதில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக அஜித்துடன் இணைந்து தான் சைக்கிளிங் செய்வதாகவும் தல அஜித் தான் பார்த்ததில்லையே கடுமையான போராளி என்றும் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு சைக்கிளிங் என்றும் சுரேஷ் தனது பதிவில் கூறி இருந்தார்.

- Advertisement -

மேலும், அஜித்தின் இந்த பயணம் குறித்து குறிப்பிட்டுள்ள அவர், எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அஜித் இந்தியாவில் ஹைதராபாத், விசாகப்பட்டினம், கோயமுத்தூர், திருப்பதி மற்றும் சில வடமாநில பகுதிகளில் சைக்கிளிங் செய்வார் இதுவரை அஜித்துடன் இணைந்து தாம் 30 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிளிங் செய்திருக்கிறேன். இன்னும் சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் ஆயிரமாயிரம் தொலைவுகள் கடக்க வேண்டும் என்றும் சுரேஷ் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

நண்பர்களுடன் அஜித்குமார்

சினிமா எனக்கு தொழில்தான். வித்தியாசமானப் படங்கள் பலவும் நடித்துவிட்டேன். அடுத்தப்படம் என்ன, அதற்கடுத்தப்படம் என்ன எனத்தொடர்ந்து சினிமா பற்றியே சிந்தித்து என்மேல் நானே ப்ரஷர் போட்டுக்கொள்ளவிரும்பவில்லை. இந்த வாழ்க்கையை எனக்குப்பிடித்ததுபோல வாழ விரும்புகிறேன். ரைஃபிள் ஷூட்டிங், சைக்கிளிங், ரிமோட் கன்ட்ரோல்டு ஹெலிகாப்டர்ஸ், போட்டோகிராபி என எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் நான் நடிகனாக மட்டுமே நீடிக்கவிரும்பவில்லை. எனக்குப்பிடித்த, ரசிகர்களுக்கும் பிடிக்கும்படியான கதைகளைத் தேர்ந்தெடுத்து அவ்வப்போது நடிப்பேன். அதற்காக ஒவ்வொரு தீபாவளிக்கும், ஒவ்வொரு பொங்கலுக்கும் ஒருபடம் என்றெல்லாம் என் மேல் நான் சுமையை ஏற்றிக்கொள்ளவிரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

சைக்கிளிங் மட்டுமல்லாமல் பைக் பயணம், துப்பாக்கி சுடும் பயிற்சி, ஆளில்லா விமானத்தின் ஆலோசகர் என்று பலவற்றறில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். அதே போல வலிமை படத்திற்கு பின்னர் நடிகர் அஜித் அடுத்து எந்த படத்திலும் இதுவரை கமிட் ஆகவில்லை. அதே போல 2010-ல் இருந்து 2020 வரை பத்து படங்களில் நடித்திருக்கிறார் அஜித். ஒரே வருடத்தில் இரண்டு படம், அடுத்து ஓர் ஆண்டு இடைவெளி என இடையிடையே பிரேக் எடுத்தே நடித்துவருகிறார். அதனால் ‘வலிமை’ படத்துக்கு அடுத்து சினிமாவில் ஒரு சின்ன பிரேக் அஜித் எடுப்பார் என்று அஜித் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Advertisement