ஒரு ஹீரோ நடிக்க தவறிய படத்தை வேறு ஹீரோ நடித்து ஹிட் அடைந்த படங்கள் உள்ளது. அந்த வகையில் அஜித்திற்கு வந்த நல்ல கதையம்சமுடைய படங்கள், அவர் மறுத்த படங்கள், சூழ்நிலையால் அவரால் நடிக்க முடியாமல் போன படங்கள், மற்ற ஹீரோக்கள் நடித்து செம ஹிட்டடித்திருக்கும். அப்படி, அஜித் தவறவிட்ட சில படங்களும் இருக்கிறது.
அதிலும் அஜித்திற்கு இணையான நடிகரான விஜய் நடித்த ஒரு சில படங்களை அஜித் தவறவிட்டிருக்கிறார். விஜய் நடித்த நேருக்கு நேர், லவ் டுடே போன்ற பல படங்களின் வாய்ப்பு அஜித்திற்கு தான் முதலில் வந்துள்ளது. ஆனால், விஜய் நடித்த ஒரு படத்தில் அஜித்தே நடிக்கவில்லை என்று வருத்தந்தியுள்ளார்.
இதையும் படியுங்க : உங்க கூட நடிச்சவங்க எல்லாம் செத்துடறாங்களே.! கிண்டலுக்கு பிரியா ஆனந்தின் பதிலைபாருங்க.!
பிரியமுடன், யூத் போன்ற விஜய்யின் வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விண்செண்ட் செல்வா. அவர் தனது முதல் படத்திலேயே விஜய்யை வைத்து இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரியமுடன் படத்தில் நடிகர் விஜய் ஒரு வில்லத்தனமான ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும், விஜய் முதன் முறையாக க்ளைமாக்ஸ்ஸில் இறப்பது போன்ற காட்சி கொண்ட படமும் அது தான். சமீபத்தில் பேட்டி பங்கேற்ற இயக்குனர் வின்சென்ட் செல்வா பேசுகையில், ப்ரியமுடன் படத்தைப் பார்த்துட்டு அஜித் என்னைக் கூப்பிட்டு “இந்த கேரக்டரை நான் பண்ணியிருக்கணும் செல்வா”னு சொன்னார். அவரும் அந்த கேரக்டரில் இன்வால்வ் அகிட்டார் என்று கூறியுள்ளார்.