தமிழில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்த "வாமனன்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை என்றாலும் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிட்சியமானவர் தான்.
https://twitter.com/lovel0velove143/status/1119809955610054656
இறுதியாக ஆர் ஜே பாலாஜி நடித்த 'எல் கே ஜி' படத்தில் நடித்திருந்தார்.
நடிகை பிரியா ஆனந்த்தை கிண்டல் செய்யும் விதமாக டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் ஸ்ரீதேவி, பிரியா ஆனந்துடன் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை. ‘எல்.கே.ஜி.’ படத்தில் ஜே.கே.ரித்தீஷ் பிரியா ஆனந்துடன் நடித்தார். ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டார்.
பிரியா ஆனந்துடன் சேர்ந்து நடிப்பவர்கள் இறந்து போகிறார்கள். சக கலைஞர்களுக்கு கெட்ட ராசியின் அடையாளமாக பிரியா ஆனந்த் இருக்கிறார் என்று அவர் தெரிவித்திருந்தார். அதற்கு ட்விட்டரில் பதிலளித்த பிரியா ஆனந்த்,
நான் வழக்கமாக உங்களை போன்றவர்களுக்கு பதில் அளிப்பது இல்லை.
https://twitter.com/PriyaAnand/status/1119827150020833280
ஆனால், நீங்கள் தெரிவித்த விஷயம் மோசமானது என்பதை உங்களுக்கு புரிய வைக்க விரும்புகிறேன். உங்களை நான் பதிலுக்கு தரக்குறைவாக பேச மாட்டேன். உங்கள் டுவிட்டர் கணக்கின் பெயர் அன்பு என்று உள்ளது. அது உங்களுக்கு ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.





