அஜித்துடன் இருக்கும் இந்த பிரபலம் யாருனு தெரிகிறதா.! பல 90 ஸ் கிட்ஸ்களின் ரோல் மாடலே இவர் தான்.!

0
8380
Ajith-with-kutraleeswaran

அஜித் தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாராகியுள்ள நிலையில் அஜித் சால்ட் அண்ட் பேப்பர் கெட்டப்பில் இருந்து பிளாக் ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார். சமீபத்தில் அஜித் புதிய கெட்டப்பில் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. மேலும், அந்த புகைப்படத்தில் இருக்கும் நபரும் தற்போது வைரலாகி வருகிறார்.

Image result for குற்றாலீஸ்வரன்

அது வேறு யாரும் இல்லை பிரபல நீச்சல் வீரர் குற்றாலீஸ்வன் தான் அஜித்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படத்தை குற்றாலீஸ்வரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீச்சல் வீரரான குற்றாலீஸ்வரன் இந்தியா சர்பாக சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்து பல பதக்கங்களை வென்றுள்ளார்.

- Advertisement -

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இவர் 1996-ம் ஆண்டு விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. மேலும், இவரை பற்றிய பாடம் 90 ஸ் கிட்ஸ் பாட புத்தகத்தில் கூட இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்தை சந்தித்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள குற்றாலீஸ்வரன் “தலயுடன் நம்பமுடியாத ஒரு மாலை. நான் உங்கள் பெரிய ரசிகன் என்று தல சொல்லும்போது, இந்த மனிதனின் எளிமை என்னை அசரடித்துவிட்டது. விளையாட்டு மேம்பாடு சம்பந்தமாக சில முன்னெடுப்புகள் குறித்து ஆலோசித்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement