சன் தொலைக்காட்சியில் பல மாதங்கள் வெற்றிகரமாக ஓடிய தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷப்னம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வசந்தம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த ஷப்னம் அதன் பின்னர் ராஜா ராணி தொடர் மூலம் மேலும் பிரபலமானார்.

நடிகை ஷப்னத்திற்கும் ஆர்யன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் 2018 ஆம் செப்டெம்பர் மாதம் திருமணம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இவர்கள் திருமணம் நடைபெறவில்லை. இதனால் இவர்கள் பிரிந்து விட்டார்கள் எண்று பலர் நினைத்த நிலையில் இவர்கள் திருமணம் அடுத்த மாதம் 7 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பாருங்க : அஜித்துடன் இருக்கும் இந்த பிரபலம் யாருனு தெரிகிறதா.! பல 90 ஸ் கிட்ஸ்களின் ரோல் மாடலே இவர் தான்.!
தனது வருங்கால கணவர் குறித்து முன்பு பேசி இருந்த ஷப்னம், அவர் பெயர் ஆர்யன். ஐடி கம்பெனி எம்.டி. செம்ம கேரிங் டைப். செப்டம்பர் மாசம் நிச்சயதார்த்தம் நடந்துச்சு. வர்ற ஜூனில் நிக்காஹ். என் குடும்பத்தினர் பார்த்து செலக்ட் பண்ணின மாப்பிள்ளை. நிச்சயதார்த்துக்குப் பிறகு காதலிச்சுட்டிருக்கோம். அடுத்த மாசத்திலிருந்து கல்யாண வேலைகளைத் தீயாக ஆரம்பிக்கணும்.


அவருக்காக நான் நேரம் செலவிட முடியலை என்பதுதான் ஒரு பெரிய குறையா இருக்கு. ஷூட்டிங் வந்துட்டா சுத்தமா அவரோடு பேச முடியாது. அந்தச் சமயங்களில் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். இருந்தாலும் என்னைப் புரிஞ்சுக்கிட்ட அன்பான காதலன் என்று கூறியிருந்தார் ஷப்னம்.